எடையை குறைக்க உதவும் கொள்ளு இட்லி பொடி..!
தேவையான பொருட்கள்:
கொள்ளு 1 கப்
உளுந்து அரை கப்
மிளகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 5
கறிவேப்பிலை கால் கப்
பூண்டு 5 பல்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
ஒரு வாணலை அடுப்பில் வைத்து கொள்ளு மற்றும் உளுந்தை தனித்தனியாக வறுத்து எடுக்கவும்.
பின் காய்ந்த மிளகாய்,மிளகு,சீரகம்,பூண்டு மற்றும் கறிவேப்பிலையை தனித்தனியாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அனைத்தையும் நன்றாக ஆறவைத்து ஒரு மிக்ஸியில் போட்டு உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் கொள்ளு இட்லி பொடி மணமணக்க தயார்.
