நெய் சாதம் செய்வது எப்படி..?
வீட்டில் என்ன செய்வது என்று தெரியவில்லையா.. கவலை வேண்டாம் இதோ இந்த நெய் சாதம் இன்னிக்கு செய்து அசத்துங்க சாப்பிட மணமாவும் சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- பாஸ்மதி அரிசி 1 கப்
- நெய் 1 1/2 ஸ்பூன்
- முந்திரி 10
- வெங்காயம் 1
- பிரியாணி இலை 1
- நட்சத்திர சோம்பு 1
- கிராம்பு 4
- பட்டை 1
- ஏலக்காய் 3
- பச்சை மிளகாய் 2
- உப்பு தேவையானது
- தண்ணீர் 1 3/4 கப்
செய்முறை:
- முதலில் அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து பின் தண்ணீர் ஊற்றி 30 நிமிடங்களுக்கு ஊற வைக்க வேண்டும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் முந்திரி சேர்த்து வறுத்து தனியே வைக்கவும்.
- அதே நெய்யில் வெங்காயத்தை நீளமாக நறுக்கி அதில் சேர்த்து பொன்னிறமாக வதக்கி தனியே வைக்கவும்.
- பின் அதே குக்கரில் 1/2 ஸ்பூன் நெய் சேர்த்து சூடானதும் பிரியாணி இலை, நட்சத்திர சோம்பு, கிராம்பு, ஏலக்காய், பட்டை சேர்த்து தாளித்து பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் ஊறவைத்த அரிசியை வடிகட்டி சேர்த்து 5 நிமிடங்களுக்கு வதக்க வேண்டும்.
- பிறகு 1 3/4 கப் தண்ணீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- குக்கரை மூடி 15 நிமிடங்களுக்கு சிம்மில் வைத்து வேகவைக்க வேண்டும்.
- பின் பிரஷர் போனதும் குக்கரை திறந்து சாதத்தை லேசாக கிளறிவிட்டு அதில் வறுத்த முந்திரி, வெங்காயம் சேர்த்து கிளறி விடவும்.
- கடைசியாக கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- சூடாக சாப்பிடலாம் சாப்பிட நல்லா மணமாகவும் சுவையாகவும் இருக்கும்.