முட்டை கீமா ரெசிபி..?
முட்டை கீமா என்பது வேகவைத்த முட்டையை துண்டுகளாக்கி மசாலாவுடன் செய்த ஒரு அருமையான உணவாகும். இது சாதத்துடன் தொட்டு சாப்பிட மற்றும் சப்பாத்தி பரோட்டா ஆகியவற்றுடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- முட்டை 4
- எண்ணெய்
- கடுகு
- சீரகம்
- பட்டை
- கிராம்பு
- ஏலக்காய்
- பிரியாணி இலை
- வெங்காயம் 1
- இஞ்சி பூண்டு விழுது 2 ஸ்பூன்
- தக்காளி 1
- மஞ்சள்தூள்
- மிளகாய்த்தூள்
- கரம் மசாலாதூள்
- மல்லித்தூள்
- பச்சை பட்டாணி 2 ஸ்பூன்
- உப்பு
- தண்ணீர்
- புதினா இலை
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- ஒரு பாத்திரத்தில் முட்டை சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி முட்டையை வேகவைத்து அதன் தோலை உரித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் உரித்த முட்டைகளை சதுரமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு, சீரகம், பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய், ஆகியவற்றை சேர்த்து தாளித்து கொள்ள வேண்டும்.
- அடுத்ததாக பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.
- பின் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
- நறுக்கிய தக்காளியை சேர்த்து நன்றாக மசிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
- பின் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், கரம் மசாலாத்தூள் ஆகிய மசாலா வகைகளை சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்.
- பச்சை பட்டாணி சேர்த்து கிளறிவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பு கொதித்ததும் புதினா மற்றும் கொத்தமல்லி இலைகளை பொடியாக நறுக்கி சேர்க்க வேண்டும்.
- தண்ணீர் நன்றாக சுண்டி வந்ததும் நறுக்கிய முட்டை சேர்த்து கிளறிவிட்டு இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் முட்டை கீமா தயார் சுவைத்து மகிழுங்கள்.