இன்னிக்கு நைட் கம்பு அடை..!
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி 1 கப்
கம்பு 100 கிராம்
இஞ்சி துண்டு
துவரம்பருப்பு 1 கப்
கடலை பருப்பு 1 கப்
மிளகு 1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 2
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் தேவையானது
உப்பு தேவையானது
செய்முறை:
அரிசியை ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
கம்பு ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
துவரம் பருப்பு,கடலை பருப்பை ஒன்றாக சேர்த்து ஒரு பாத்திரத்தில் ஊற வைக்கவும்.
அனைத்தும் ஊறியவுடன் அரிசி மற்றும் கம்பு,மிளகாய்,மிளகு,இஞ்சி ஆகியவற்றை ஒரு மிக்ஸியில் சேர்த்து அடை மாவு பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
பருப்புகளை தனியே அரைத்துக் கொள்ளவும்.
இரண்டையும் ஒன்றாக கலந்து உப்பு,நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லில் மாவை சிறிது ஊற்றி அடைகளாக வார்த்து சுற்றி எண்ணெய் விட்டு நன்றாக வேக வைத்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் கம்பு அடை தயார்.