விபத்தை தடுக்க காவல்துறையின் புதிய முயற்சி..!
திருவள்ளூர் பகுதியில் விபத்துகளை குறைக்கும் வகையில் நெடுஞ்சாலைகளில் நிறுவப்பட்ட டிஜிட்டல் பிளிங்கர்ஸ்சை காவல்துணை கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் நகரப் பகுதிக்குள் சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலை செல்வதன் காரணமாக அடிக்கடி விபத்துகளால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் பொருட்டு திருவள்ளூர் மாவட்ட காவல்துறை மற்றும் எஸ் ஆர் எம் டிராபிக் சிஸ்டம் இணைந்து சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் 9 இடங்களில் விபத்துகளைத் தடுக்கும் வகையில் எச்சரிக்கை டிஜிட்டல் பிலிங்கர்ஸ் பொருத்தப்பட்டது.
இந்த எச்சரிக்கை டிஜிட்டல் பிலிங்கர்ஸை திருவள்ளூர் உட்கோட்ட துணை கண்காணிப்பாளர் அழகேசன் மற்றும் திருவள்ளூர் நகர காவல் ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் ஆகியோர் துவக்கி வைத்து அவ்வழியாக சாலையில் பயணித்தவர்களிடம் டிஜிட்டல் பிலிங்கர்ஸ் இன் பயன்பாடு குறித்து விளக்கினார்.
மேலும் வாகன ஓட்டிகள் அனைவரும் சாலை பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாகனங்களை இயக்கினால் விபத்துகளை குறைக்கலாம் எனவும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
-பவானி கார்த்திக்