பாயசத்தை இதுலயும் பண்ணலாமா..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
- பாஸ்மதி அரிசியை சிறியதாக ரவை போல உடைத்து அதை கொண்டு பால் பாயாசம் செய்ய நன்றாக சுவையாக இருக்கும்.
- பூசணிக்காய் அல்வாவிற்கு காயை ஃபிரிஜ்ஜில் சிறிது நேரம் வைத்திருந்து பின் துருவினால் சரியாகவும் எளிதாகவும் வரும்.
- வெண்டைக்காய் பொரியலுக்கு காயை நறுக்கியதும் தட்டில் போட்டு வெயிலில் சிறிது நேரம் வைத்திருந்து பின் வதக்கினால் சீக்கிரம் வதங்கும்.
- முட்டை வேகவைத்த பாத்திரத்தில் சிறிது சாதம் வடித்த நீர் ஊற்றிவைத்து கழுவினால் கவுச்ச வாசனை வராது.
- பிரியாணிக்கு வீட்டில் நெய் இல்லையென்றால் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
- உதிர்த்து வைத்துள்ள பூண்டுடன் உருளைக்கிழங்கு வைக்க சீக்கிரம் முளைத்து வராது.
- வெண்டைக்காய் நறுக்கும் கத்தியில் சிறிது எலுமிச்சை சாறு தடவி நறுக்கினால் பிசுபிசுப்பு இருக்காது.
- சீரகம் மற்றும் மிளகு இரண்டையும் வறுத்து பொடியாக்கி ஆட்டு ரத்தம் செய்யும்போது தூவி இறக்கினால் அருமையாக இருக்கும்.
- பால் உரை ஊற்றுவதற்கு தயிர் இல்லையெனில் காய்ந்த மிளகாய் ஒன்றை உடைத்து பாலில் போட்டு வைக்க தயிர் ரெடியாகிடும்.
- பாத்திரத்தின் அடியில் படியும் கறை நீங்க உப்பு மற்றும் வினிகர் கலந்த நீரை வைத்து துடைத்தால் போதும்.
