இன்னிக்கு புல்கா செய்யலாமா..
கோதுமை மாவு 2 கப்
உப்பு தேவையானது
சூடான தண்ணீர்
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு போட்டு அதில் உப்பு சேர்த்து கலந்து சிறிது சிறிதாக வெந்நீரை சேர்த்து நன்கு பிசையவும்.
பின் அதனை நன்றாக 30 நிமிடங்களுக்கு ஊறவைக்கவும்.
அரை மணி நேரத்திற்கு பிறகு மாவை எடுத்து திரும்பவும் 2 நிமிடங்களுக்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும்.
பின் சப்பாத்தி கட்டையில் ஒரு உருண்டையை வைத்து மாவு தூவி தேய்த்துக் கொள்ளவும்.
தோசைக்கல்லை சூடாக்கி சப்பாத்தியை அதில் போட்டு லேசாக வெந்ததும் அதனை எடுத்து நேரடியாக நெருப்பில் வைத்து உப்பி வந்ததும் மறுபக்கம் திருப்பி உடனே எடுத்து நெய் அல்லது வெண்ணெய் தடவி உடனே சாப்பிட பரிமாறலாம்.