அதிக அளவு இருமல் மருந்து குடித்த 4 வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்..!
மதுரை தபால்தந்தி பாமா நகரைச் சேர்ந்த கட்டிடத் தொழிலாளியான அலெக்ஸ் பாண்டி என்பரின் மகள் சிவரஞ்சனி. 4 வயதாகும் குழந்தைக்கு காய்ச்சல், சளி தொந்தரவால் அவதி பட்டு வந்தார்.
இதனால் சிறுமியின் பெற்றோர்கள் சிறுமியை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும், சிறுமிக்கு காய்ச்சல் மேலும் அதிகரித்த நிலையில், ஏற்கெனவே பார்த்த மருத்துவரிடம் மீண்டும் நேற்று சென்றுள்ளனர்.
அப்போது, மருத்துவரின் பரிந்துரையைத் தாண்டி அதிகளவில் இருமல் மருந்து கொடுக்கப்பட்டிருப்பதால் பாதிப்பு ஏற்பட்டு காய்ச்சல் குறையவில்லை என, மருத்துவர் கூறியுள்ளார்.
பின்னர் அவரது அறிவுறுத்தலின் பேரில், பெற்றோர் உடனே குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது சிறுமி சிவரஞ்சினி வழியிலேயே பரிதபமாக உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து குழந்தையின் தந்தை அளித்த புகாரின் பேரில் அலெக்ஸ் பாண்டி தல்லாகுளம் போலீசார் சந்தேக மரணம் என, வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
-பவானி கார்த்திக்