இட்லி தோசை அலுத்துபோனால் வெஜிடபிள் பான் கேக்..! காலை உணவு..!
கோதுமை மாவு அரை கப்
பொட்டுகடலை அரை கப்
வெங்காயம் 1 நறுக்கியது
பூண்டு 5 பற்கள்
பச்சை மிளகாய் 3 நறுக்கியது
முட்டை கோஸ் 1 கப்
கேரட் 2 துருவியது
உப்பு தேவையானது
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
சீரகத்தூள் 1 ஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது
எண்ணெய் தேவையானது
ஒரு பேனில் எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய காய்கறிகளை எல்லாம் போட்டு வதக்க வேண்டும்.
பின் உப்பு மற்றும் மசாலா வகைகளை எல்லாம் சேர்த்து வதக்கி தண்ணீர் சேர்த்து வேக வைக்க வேண்டும்.
பொட்டுகடலையை மாவு செய்து கொள்ள வேண்டும்.
வதக்கியதை ஆறவைத்து பொட்டுகடலை மாவு,கோதுமை மாவு,கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து கலந்துக் கொள்ள வேண்டும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி மாவில் ஒரு உருண்டையை வைத்து கைகளால் தட்டி சுற்றி எண்னெய் விட்டு இருபக்கமும் வேகவைத்து எடுக்க வேண்டும்.