சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
பிரட் துண்டுகள் 4
முட்டை 2
பால் 1/4 கப்
வெங்காயம் 2 ஸ்பூன் நறுக்கியது
2 பச்சை மிளகாய் நறுக்கியது
கொத்தமல்லி இலை 2 ஸ்பூன் நறுக்கியது
கரம் மசாலா 1/4 ஸ்பூன்
சீரகத்தூள் 1/4 ஸ்பூன்
உப்பு தேவையானது
மஞ்சள்தூள் 1/4 ஸ்பூன்
மிளகாய் விதைகள் 1 ஸ்பூன்
புதினா சட்னி 4 ஸ்பூன்
வெண்ணெய் 1 1/2 ஸ்பூன்
செய்முறை:
ஒரு அகலமான பாத்திரத்தில் முட்டை உடைத்து ஊற்றி நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.
பின் முட்டையோடு பால், வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி இலை, கரம் மசாலா, சீரகத்தூள், உப்பு, மஞ்சள்தூள், மிளகாய் விதைகள் ஆகிய அனைத்தையும் சேர்த்து நன்றாக அடித்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பிரட் துண்டுகளின் ஒரு பக்கம் மட்டும் புதினா சட்னியை தடவி வைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து வெண்ணெய் போட்டு உருகியதும், பிரட் துண்டுகளை எடுத்து முட்டை கலவையில் நனைத்து ஃபேனில் போட்டு மிதமான தீயில் வைத்து முட்டை கலவையை கொஞ்சம் கரண்டியால் எடுத்து பிரட் மீது ஊற்றி வேகவைத்து மறுபக்கம் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுக்கவும்.
பிரட் துண்டுகளை தட்டில் மாற்றி சாட் மசாலா தூவி சாப்பிடலாம்.
அவ்வளவுதான் சுவையான பிரெஞ்ச் டோஸ்ட் தயார்.