இதெல்லாம் கண்டிப்பா தேவைப்படும்..!
குக்கரில் பருப்பு வேகவைக்கும்போது அதில் சிறிது விளக்கெண்ணெய் சேர்த்து வேகவைக்க சீக்கிரம் வெந்துவிடும்.
கீரை கூட்டு செய்யும்போது அதனுடன் சிறிது சர்க்கரை சேர்க்க நிறம் மாறாமல் இருக்கும்.
கடுகு வாணலில் சேர்த்து வறுத்து வைத்துக்கொள்ள தாளிக்கும்போது சிதறாமல் இருக்கும்.
குழம்பு வைக்கும்போது வெங்காயம் மற்றும் காய்கறிகளை வதக்கிய பின் தக்காளி சேர்த்தால் சுவையாக இருக்கும்.
ஆடு மற்றும் கோழி இறைச்சி செய்யும்போது அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து வறுத்தால் சுவையாக இருக்கும்.
அதிரசம் செய்யும்போது மாவில் சிறிது பேரிச்சை சேர்த்து செய்தால் ருசியாக இருக்கும்.
இரண்டு ஸ்பூன் தேங்காய் துருவலை அரைத்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டு கார சட்னி தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும்.
கடைசியில் தேங்காய் சட்னியை தாளிப்போம் அதற்கு மாற்றாக தாளித்த பொருட்களை தேங்காய் சட்னியுடன் சேர்த்து அரைக்க சுவையாக இருக்கும்.
உணவில் அடிக்கடி சப்போட்டா பழத்தை சாப்பிட குடல் புற்றுநோய் வராது.
இட்லி பொடி செய்யும்போது அதில் எள் சேர்த்து அரைக்க சுவை கூடுதலாக இருக்கும்.
ரவையை தூள் செய்து நீரில் ஊறவைத்து இரண்டு மணி நேரம் கழித்து தோசை மாவில் கலந்து தோசை சுட்டால் சுவையாக இருக்கும்.
வெண்டைக்காயை நறுக்கிய பின் வெயிலில் அரை மணி நேரம் வைத்திருந்து பின் சமைத்தால் அதன் வழவழப்பு தன்மை இருக்காது.
பூஜை பாத்திரங்களை கழுவும்போது சிறிது அரிசி மாவினை சேர்த்து தேய்க்க பளிச்சென்று மாறும்.
