ஹெல்தியான கோதுமை ரவா இட்லி…!
கோதுமை ரவா 1 கப்
உப்பு தேவையானது
தயிர் 1 கப்
எண்ணெய் 2 ஸ்பூன்
கடலை பருப்பு 1 ஸ்பூன்
கடுகு 1 ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
பெருங்காயத்தூள் காப் ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
ஒரு வாணலில் ரவை சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.
ரவை ஆறியவுடன் தயிர்,உப்பு,தயிர் மற்றும் தண்ணீர் சேர்த்து கலந்து ஒரு மணி நேரத்திற்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி தாளிப்பு பொருட்களை எல்லாம் போட்டு தாளித்து பின் பச்சை மிளகாய்,இஞ்சி,கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
தாளித்தவற்றை ஊறவைத்த ரவையுடன் சேர்த்து கலந்து விடவும்.
இட்லி தட்டில் சிறிது எண்ணெய் தடவி ரவை கலவையை ஒரு கரண்டி ஊற்றி இட்லி பாத்திரத்தில் 15 நிமிடங்களுக்கு வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் ஹெல்தியான கோதுமை ரவா இட்லி தயார்.