“சிறைக்கு சென்ற விஜயபாஸ்கர்.. அரசியல் பழி வாங்கும் நோக்கம்” விஜயபாஸ்கர் சொன்ன கருத்து..?
கரூர் காட்டூர் பகுதியை சேர்ந்த தொழிலாதிபர் பிரகாஷ், தோரணக்கல் பட்டியில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்காக இருந்த அரசுக்கு சொந்தமான 100 கோடி மதிப்புள்ள 22 ஏக்கர் நிலத்தை, போலி சான்றிதழ் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்றுள்ளார்.
மேலக்கரூர் சார் பதிவாளர் அளித்த புகாரின் அடிப்படையில், கரூர் நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வழக்கு ஜூன் 18ம் தேதி சிபிசிஐடி அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.
அதன் பின்னர், கரூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் -1 நீதிமன்றத்தில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மூன்று முறை முன் ஜாமீன் மனுவை தாக்கல் செய்துள்ளார். ஆனால் அந்த முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால், அதிமுகவின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவாகினார்
கடந்த 34 நாட்களுக்கு மேல் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமறைவானதால், 13 தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். அப்போது தான் அவர் கேரளாவில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில், நேற்று கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் உள்ள தனியார் விடுதியில், தங்கி இருந்த விஜயபாஸ்கர் மற்றும் நில மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியான தொழிலதிபர் பிரகாஷ் மற்றும் பிரவீன் ஆகிய இருவரையும் கைது செய்து, கரூர் சிபிசிஐடி அலுவலகத்திற்கு மதியம் 2 மணி அளவில் அழைத்து வந்தனர்.
அதனை தொடர்ந்து கரூர் சிபிசிஐடி அலுவலகத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக, சிபிசிஐடி அதிகாரிகள் விஜயபாஸ்கரிடம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இரவு 8 மணி அளவில் கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து வந்தனர்.
அதனை அறிந்து அதிமுகவி நிர்வாகிகள் மருத்துவமனை வளாகம் முன் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மருத்துவ பரிசோதனைகால் முடிந்ததும், செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர், “தன் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி” காரணமாக தன் மீது பல போலி வழக்குகள் பதிவிடப்பட்டுள்ளது அதை நீதிமன்றத்தின் மூலம் நான் சந்திக்க தயாரக இருக்கிறேன் என கூறினார்.
அதன் பின்னர் நள்ளிரவு ஒரு மணி அளவில் கரூர் குற்றவியல் நடுவர் எண்-1 நீதிபதி பரத்குமார் முன்பு, ஆஜர்படுத்தினர். வரும் ஜூலை 31ஆம் தேதி வரை திருச்சி மத்திய சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
நீதிபதியின் உத்தரவின் பேரில் உரிய போலீஸ் பாதுகாப்புடன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் பிரவின் ஆகிய இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..