இப்படி இஞ்சி சட்னி செய்து பாருங்க.. சூப்பரா இருக்கும்..!
எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
இஞ்சி – 1/2 கப் நறுக்கியது
வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 6
காய்ந்த மிளகாய் – 6
புளி – 2 துண்டு
துருவிய தேங்காய் – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை – 1/2 கப்
உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்
வெல்லம் – 1 துண்டு
எண்ணெய் – 1 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு – 1/4 தேக்கரண்டி
சீரகம் – 1/4 தேக்கரண்டி
கடுகு – 1/4 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 1
பெருங்காய தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பில்லை
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி சேர்த்து வதக்க வேண்டும்.
வெங்காயம் வதங்கியதும் அத்துடன் தேங்காய், கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
ஆறவைத்து ஒரு மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
பின் தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை ஆகியவற்றை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் ஊற்றவும்.
அவ்வளவுதான் சத்தான இஞ்சி சட்னி தயார்.