நரிகளுக்காக வைக்கப்பட்ட வலையில் சிக்கிய நாய்கள்… போலீஸ் விசாரணை..!
அரியலூர் மாவட்டம் சன்னாவூர் கிராமத்திற்கு அருகிலுள்ள கருவத்தோப்பில் அதே கிராமத்தை சேர்ந்த ஜெயபால் தனது 3 வளர்ப்பு நாய்களை அழைத்து சென்றுள்ளார்.
அப்போது நாய்கள் இருந்த நேரத்தில் வெடிசத்தம் கேட்டது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஜெயபால் அருகில் சென்று பார்த்தபோது இரண்டு நாய்களும் இறந்துகிடந்தது.
அப்போது சந்தேகப்படும் படி இருந்த இருவரை அழைத்து விசாரணை செய்ததில் நரியை பிடிக்க ஆட்டு கொழுப்பை தடவி நாட்டு வெடி வைத்ததையும் அதனை நாய்கள் கடித்ததால் வெடித்து இறந்துவிட்டதாக கூறினர்.
இதனையடுத்து இருவரையும் வெங்கானூர் பொலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து வெங்கனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது அவர்கள் பெரம்பலூர் மாவட்டம் மலைப்பநகரை சேர்ந்த குறவர் இனத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் மற்றும் சுரேஷ் என தெரியவந்தது.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”