ரோட்டுகடை முட்டை கொத்து பரோட்டா..!
தேவையான பொருட்கள்:
எண்ணெய் தேவையானது
வெங்காயம் 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் 1
தக்காளி 2
மஞ்சள்தூள் அரை ஸ்பூன்
மிளகாய்த்தூள் அரை ஸ்பூன்
உப்பு தேவையானது
மல்லித்தூள் 1 ஸ்பூன்
கரம் மசாலா தூள் அரை ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
தண்ணீர் அரை கப்
முட்டை 2
பரோட்டா 3
கொத்தமல்லி இலை சிறிது
செய்முறை:
முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
பிறகு அதில் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை சேர்த்து வதக்க வேண்டும்.
வதங்கியதும் தக்காளி சேர்த்து நன்றாக மசிய வதக்கிக் கொள்ள வேண்டும்.
பின் அதில் அரை ஸ்பூன் மஞ்சள்தூள், அரை ஸ்பூன் மிளகாய்த்தூள், தேவையான உப்பு, மல்லித்தூள் ஒரு ஸ்பூன், கரம் மசாலா அரை ஸ்பூன் சேர்த்து பச்சை வாசனை நீங்கி எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்க வேண்டும்.
பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி மசாலா அனைத்தும் பாத்திரத்தில் ஒட்டாமல் எண்ணெய் பிரிந்து வந்ததும் அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
நன்றாக கொதித்து வந்ததும் இரண்டு முட்டைகளை உடைத்து ஊற்றி நன்றாக கிளறி விடவும்.
அனைத்தும் ஒன்றுசேர்ந்து வந்ததும் பிச்சிப்போட்ட பரோட்டாவை சேர்த்து கிளறி கலந்து விடவும்.
உப்பு சரிபார்த்து தேவை என்றாக உப்பு சேர்த்து கிளறவும்.
கடைசியாக கொத்தமல்லி இலை தூவி கிளறி இறக்க வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான ரோட்டுகடை முட்டை கொத்து பரோட்டா தயார்.