அடுத்த பிக்பாஸ் தொகுப்பாளர் யார்? இவரா..? பேசுனா கேட்டுட்டே இருக்கலாமே?
தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில், அதிக டி.ஆர்.பி ரேட்டிங் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்-பாஸ் தான். இந்த நிகழ்ச்சியை, நடிகர் கமல் ஹாசன் தான் தொகுத்து வழங்கி வந்தார்.
ஆனால், தற்போது அவர் திரைப்படங்களில் பிசியாக நடிப்பதாலும், அமெரிக்காவுக்கு சென்று AI தொடர்பான படிப்பை படிக்க இருப்பதாலும், பிக்-பாஸ் நிகழ்ச்சியை இந்த ஆண்டு தொகுத்து வழங்க மாட்டார் என்று கூறப்பட்டது.
இதனால், ரசிகர்கள் ஒரு பக்கம் வருத்தம் அடைந்தாலும், அடுத்து தொகுத்து வழங்கப்போவது யார்? என்று கேள்வி அவர்கள் மத்தியில் எழுந்திருந்தது. இதற்கு பதில் சொல்லும் விதமாக, தற்போது தகவல் ஒன்று கிடைத்திருக்கிறது.
அதாவது, நடிகர் விஜய்சேதுபதி தான், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னர், நடிகை ரம்யா கிருஷ்ணன், நடிகர் சிம்பு, அரவிந்த்சாமி உள்ளிட்டோரில் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
-பவானி கார்த்திக்