காலை உணவாக பன்னீர் சாண்ட்விச்..!!
தேவையான பொருட்கள்:
பன்னீர் 1/4 கப்
தயிர் 1/2 கப்
கிரீம் 2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது 1/2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் 1/4ஸ்பூன்
மிளகுத்தூள் 1/2 ஸ்பூன்
உப்பு தேவையானது
சீஸ் தேவையானது
வெள்ளரிக்காய் நறுக்கியது 4
தக்காளி நறுக்கியது 4
கோஸ் இலை நறுக்கியது 1/4 கப்
குடைமிளகாய் நறுக்கியது 1/4 கப்
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
ஆயில் 1 ஸ்பூன்
பிரட் 1
செய்முறை:
முதலில் பன்னீரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் தயிர், கிரீம், இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
பின் அக்கலவையில் பன்னீர் துண்டுகளை சேர்த்து கலந்துவிட்டு 15 நிமிடங்களுக்கு ஊறவைக்க வேண்டும்.
ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி அந்த பன்னீர்களை சேர்த்து 5 நிமிடங்களுக்கு வேகவத்து எடுக்கவும்.
பிரட்டை இரண்டாக பிளந்து அதே ஃபேனில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ளவும்.
ஒரு தட்டில் பிரட்டை பிரித்து வைக்கவும்.
அதன் ஒரு பக்கத்தில் சீஸ் துண்டுகளை வைக்கவும்.
மறுபக்கம் கோஸ் இலைகளை வைத்து அதன் மேல் தயாரித்த பன்னீர் கலவையை வைக்கவும்.
பின் அதன் இருபுறமும் நறுக்கிய வெள்ளரிக்காய், தக்காளி, குடைமிளகாய், பச்சை மிளகாய் ஆகியவற்றை ஒன்றன்பின் ஒன்றாக வைக்கவும்.
உங்களுக்கு தேவைப்பட்டால் மயோனஸ் மற்றும் புதினா சட்னி ஆகியவற்றை தடவிக் கொள்ளலாம்.
கடைசியாக அதன் மேலே மிளகுத்தூளை தூவவும்.
பிரட்டின் ஒரு பக்கத்தை அப்படியே மெதுவாக மூடி பரிமாறலாம்.
அவ்வளவுதான் சுவையான பன்னீர் சாண்ட்விச் தயார்.
