21 மாவட்டங்களை வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை..!!
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
தமிழகத்தில் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது.., கடந்த அக்டோபர் 16ம் தேதி கூட சென்னைக்கு ரெட் அலர்ட் விடப்படிருந்தது., அதன் பின்னர் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் மழைநீர் தேங்கியது.., நேற்று முன்தினம் முதல் சீரமைப்பு பணிகள் தொடங்கி பணிகள் தொடர்ந்து வரும் நிலையில்
தற்போது மீண்டும் தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விருதுநகர், மதுரை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மற்றும் மதுரை ஆகிய 21 மாவட்டங்களுக்கு மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது..
குறிப்பாக சென்னையின் புறநகர் பகுதிகளுக்கு கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..