அட இவருக்கு இப்படி ஒரு வரலாறு இருக்கா..?
மும்பையில் பிறந்த ஷிவம் துபே, தனது 6 வயதில் இருந்தே கிரிக்கெட்டை விளையாட ஆரம்பித்தார். அப்பா பல தொழில்களுக்குள் இறங்கி அனைத்திலும் தலையில் துண்டை போட்டவர் இவர் தான், பல்வேறு குடும்ப சூழ்நிலைகளுக்கு மத்தியில் தனது 14 வயதில் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்ததும் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்துவிடுவார்.
கிராமத்தில் நடந்த சில போட்டியில் தனது சிறப்பான பந்து வீச்சால், தனது பள்ளி அணியை வெற்றி பெற செய்து கோப்பை சென்றார். அது தான் அவரின் அடையாளம் என அப்போது பலருக்கும் தெரியவில்லை ஆனால் ஷிவம் தூபேவிற்கு தெரிந்தது.
இருந்தாலும் குடும்ப சூழல், உடல் பருமன், இன்னும் சில பல காரணங்களால் துபேவால் தொடர்ந்து விளையாட முடியாமல் போனது. அதற்கு பின்னர் 5 வருடங்கள் கழித்து பத்து கிலோ எடையை குறைத்து மீண்டும் கிரிக்கெட்டிற்குள் நுழைகிறார்.
ஆரம்ப காலக்கட்டங்களில் பந்து வீச்சாளராக விளையாடி கொண்டிருந்த ஷிவம் துபே, சையது முஸ்டாக் அலி தொடருக்கு பின் ஆட்ட நாயகனாக பேசப்பட்டார். அதிலும் பிரவீன் தம்பி அவர்களின் பந்து வீச்சில் 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்தார், அந்த பந்து வீச்சு தான் அவரை யார் என்று திரும்பி பார்க்க வைத்தது..
அதற்கு பின் தொடர்ந்து பல்வேறு டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடிய ஷிவம் துபே, ஐபிஎல் ஆக்சனில் முதன் முதலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணிக்காகவே விளையாடினார். அவரது பவர் ஹிட்டிங் திறமையை உணராத பெங்களுரு நிர்வாகம் அவரை பல போட்டிகளில் பெஞ்சிலேயே தான் உட்கார வைத்தது. தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக பெங்களுரு அணியின் வாட்டர் பாயாக தான் செயல்பட்டு வந்தார்.
இப்படி சிறப்பாக ஆடினால் யாருக்கு தான் பிடிக்காது அதனால் தான். ராஜஸ்தான் அணி அவரை ஏலத்தில் எடுத்தது, ஆனால் அங்கும் அவரின் திறமையை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை என சொல்லலாம்..
2022 ஐபிஎல் ஆக்சன், ஷிவம் துபேவை சென்னை அணி விலைக்கு வாங்குகிறது. போட்டிக்கு முன் வலை பயிற்சி மேற்கொண்ட ஷிவம் துபே, பவுலர்கள் போடும் அனைத்து பந்துகளையும் கிரவுண்டுக்கு வெளியே அடித்துக் கொண்டு இருந்தார்.
அவரின் அசாத்திய திறமையை உட்கொணர்ந்த சென்னை நிர்வாகம், தொடர்ந்து அவரை அணியில் பிளேயிங் 11-யில் வைக்க முடிவு செய்தது. தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளை கொடுத்து, அவரின் அழுத்தங்களை சரி செய்து, இன்று சிக்ஸர் துபேவாக அவரை நிலை நிறுத்தி இருக்கிறது.
ஆறடி உயரம் கொண்ட ஷிவம், ஒரே வீச்சில் இருக்கும் இடத்தில் இருந்தே, பவுலர்களின் பந்துகளை விண்வெளிக்கே பறக்க விடுவார்.
அடிச்சா சிக்ஸ் தான் அதுவும் கிரவுண்டுக்கு வெளில தான், என தனக்குள் ஒரு யுக்தியை வகுத்து வைத்து இருக்கும் ஷிவம் துபேவிற்கு சென்னை ரசிகர்கள் செல்லமாக வைத்த பெயர் சிக்ஸர் துபே என்ற ஆறுச்சாமி, அதிரடி மன்னன் தோனியே, ஷிவம் துபேவின் பல சிக்ஸர்களை வியந்து பார்த்த தருணங்களும் ஐபிஎல்லில் அரங்கேறி இருக்கிறது.
நல்ல வீரர்களை தொடர்ந்து பேக் செய்து அவர்களை மெருகேற்றும் சிஎஸ்கே நிர்வாகத்தால் கண்டு எடுக்கப்பட்ட மற்றும் ஒரு பொக்கிஷம் ஷிவம் துபே என்று சொல்லலாம்.
“சிஎஸ்கே அணிக்கு மட்டும் அல்ல, இந்திய அணிக்கும் மிடில் ஆர்டரில் ஒரு பவர் ஹிட்டர் கிடைத்து இருக்கிறார். வரும் டி20 உலக கோப்பையிலும் ஆறுச்சாமியின் ஆதிக்கம் இருக்கும் என்பதில் ஐயமில்லை“
–வீர பெருமாள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..