இந்த பாடல் எல்லாம் இவரு படியாதா..? இவங்க வாய்ஸ் கேட்கவே சூப்பரா இருக்குமே..!
ஒரு சில பாடல்கள் எல்லாம் நாம் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காது.., அதிலும் குறிப்பாக ஒரு சில பின்னணி பாடகர்களின் முகம் தெரியாமலே நாம் அவரின் பாடல்களை கேட்டு ரசிப்பது.., போனில் காலர் டியூன் வைப்பது, ரிங்க் டோன் வைப்பது என இருப்போம்.
அப்படி தான் பாடகி ஹரிணியின் பாடல்களும்.., அவரின் ஹிட் பாடல்களை பார்க்கலாம்..
சங்கீதத்தில் ஆர்வம் இருந்த இவர், நான்கு வயது இருக்கும் போது, கர்நாடக இசையை கற்றுக்கொண்டார்.., பள்ளி பருவத்திலும் பல போட்டிகளில் இருந்து பரிசையும் வாங்கியுள்ளார்..,
அப்படி ஒரு முறை தனது பள்ளி ஆண்டுவிழாவில் பாடிய போது சிறப்பு விருந்தினராக வந்திருந்த ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு ஹரிணியின் பாடல் பிடிக்க.., அவரது படத்தில் பாட வாய்ப்பு கொடுத்தார்..
ஹரிணி பாடிய முதல் சினிமா பாடல், சுஹாசினி மணிரத்னம் இயக்கிய “இந்திரா” படத்தில் இடம் பெற்ற “நிலா காய்கிறது” என்ற பாடலை பாடி இருந்தார்..,
”நிலா காய்கிறது… நேரம் தேய்கிறது…
இந்த கண்கள் மட்டும் உன்னை காணும்…”
இந்த பாடலை இவர் பாடிய போது ஹரிணிக்கு வயது 15 என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பாடல் இவருக்கு ஹிட் கொடுக்க இவரின் குரல் பலருக்கும் பிடித்தது அதன் பின் பல படங்களில் பாடும் வாய்யப்பு ஹரிணிக்கு கிடைத்தது..,
ஹிட் ஆன பாடல்கள் :
நடிகர் இளைய தளபதி விஜய், ஜோதிகா நடிப்பில் வெளியான குஷி படத்தில் தேவா இசையில் வந்த இந்த பாடல் ஒரு தனி அழகு என சொல்லலாம்..
“பூமிக்கு ஒற்றை நிலவு போதாது போதாது..,
அதனால் தான் இரண்டாம் நிலவாய் நான் வந்தேன் இப்போது”
மேகம் கருக்குது மின்னல் சிரிக்குது சாரல் அடிக்கிறதே
என் மேனியில் ஆடிய மிச்ச துளிகள் நதியாய் போகிறதே..”
ஒரு காதலனும் காதலியும் அவர்களின் நினைவில் கனவில் பாடிய பாடலும் இவர் பாடியதே.., உந்தன் மண்ணின் சேலையை காற்று வாங்கி கொண்டு போவதா என காதலன் கேட்க காதலி சொல்லும் பதில் கூட அழகாக இருக்கும்..
“முத்தம் வைத்து கொள்வதை.. வானம் என்ன எண்ணுதோ
எண்ணி வைத்த புள்ளிகள்.. நட்சத்திரம் ஆனதோ..
உந்தன் பேரை சொல்வதில்.. கோடி இன்பம் கூடுதோ”
பார்வை ஒன்றே படத்தில் இடம் பெற்ற இந்த பாடலை கேட்காத காதலர்கள் இருக்கவே முடியாது..,
இவர்களுக்கு மட்டும் கொஞ்சம் காதல்.., கொஞ்சம் ஜாலி என வைபாக இருக்கும் இந்த பாடலும் இவர் பாடியது என சொல்லலாம்…, ஒரு பெண்ணை காதலிக்க அந்த ஆண் இதற்கு முன் வேறு ஒரு பெண்ணை காதலித்ததாக சொல்லி காதல் செய்கிறார்.., இருந்து அந்த காதலி கேட்கும் கேள்விகளை விளக்குவது இந்த பாடல்..
“நீ கொண்ட காதலை நிஜமென்று நான் காண,
தற்கொலை செய்ய சொன்னால் செய்வாய்
தப்பித்து நாடு தாண்டி செல்வாய்…
வாலி படத்தில் அஜித் நடிப்பில் வெளியான இந்த பாடல் இவர் பாடியது இன்று வரை பலரின் போன் ரிங்க்டோன் இந்த பாடல் என சொல்லலாம்..
90ஸ் கிட்ஸ் களுக்கு மட்டுமல்ல 2கே கிட்ஸ் களுக்கும் இவரின் பாடல் பிடிக்கும்.., இந்த பாடல் 90ஸ் களில் வெளியானாலும் இன்று உள்ள காதலர்கள் கூட இந்த பாடலை ரீல்ஸ் செய்து இருப்பார்கள்..
“என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்
டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே..
உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…
உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…
அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…
நீ கண்டு கண்டு பிடித்தால்… பின் காமன் ஆட்சி…”
இதுவரை பாடகி ஹரிணி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் 3500ற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.. இவர் பாடிய அனைத்து பாடல்களும் ஹிட் என சொல்லலாம்..,
இப்படி தனது இனிமையான குரல் மூலம் பல்வேறு பாடல்களை பாடி தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கிய பாடகி “ஹரிணி” அவர்களுக்கு மதிமுகம் சார்பாக இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..
-லோகேஸ்வரி
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..