சுவையான செட்டிநாடு மட்டன் சுக்கா ரெசிபி..!
சுக்கா என்பது எலும்பில்லாத காரசாரமான உணவு வகையாகும். அதிலும் செட்டிநாடு ஸ்டைலில் மட்டன் சுக்கா நான் சொல்கிற மாதிரி செய்து பாருங்க செய்றது டக்குனு காலியாகிவிடும்.
தேவையான பொருட்கள்:
- அரை கிலோ மட்டன்
- இஞ்சி பூண்டு விழுது
- மஞ்சள் தூள்
- உப்பு
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு
- ஒன்றை டேபிள் ஸ்பூன் சீரகம்
- இரண்டு வரமிளகாய்
- ஒரு டேபிள் ஸ்பூன் கொத்தமல்லி
- எண்ணெய்
- 15 சின்ன வெங்காயம்
- வரமிளகாய்
- கருவேப்பிலை
- ஒரு டீஸ்பூன் கரம் மசாலா
செய்முறை:
- மட்டனை சுத்தம் செய்து நன்றாக கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் மட்டன், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய்த்தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து 15 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து மிளகு, சீரகம், வரமிளகாய், கொத்தமல்லி ஆகியவற்றை சேர்த்து வறுத்து ஆறவைத்து பின் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை மற்றும் வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் வேகவைத்த மட்டன் சேர்த்து கிளறி வதக்க வேண்டும்.
- அடுத்ததாக கரம் மசாலா தூள், அரைத்து வைத்த மசாலாத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- மசாலா பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான செட்டிநாடு மட்டன் சுக்கா தயார்.
- சூடான சாதத்தில் சூடான செட்டிநாடு மட்டன் சுக்கா பிசைந்து சாப்பிட்டால் போதும் அவ்ளோ ருசியாக இருக்கும்.