காரசாரமான நண்டு மிளகு வறுவல்..!
நண்டில் அதிகபடியான புரதம் நிறைந்துள்ளது. நண்டில் இருக்கும் பாஸ்பரஸ் சத்து சிறுநீரகங்கள் மற்றும் கல்லீரலின் செயல்பாட்டை அதிகரிக்கிறது.
இந்த முறையில் நண்டு மிளகு மசாலா செய்து பாருங்க ரொம்ப ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
- இரண்டு டீஸ்பூன் மிளகு
- அரை டீஸ்பூன் சீரகம்
- அரை டீஸ்பூன் சோம்பு
- 10 பல் பூண்டு
- ஒரு துண்டு இஞ்சி
- நண்டு
- எண்ணெய்
- நான்கு பெரிய வெங்காயம்
- அரைத்து வைத்த விழுது
- இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- இரண்டு பச்சை மிளகாய்
- மஞ்சள் தூள்
- இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள்
- கருவேப்பிலை
- ஒரு தக்காளி
- உப்பு
செய்முறை:
- முதலில் நண்டுவை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள்.
- ஒரு மிக்ஸி ஜாரில் சீரகம், மிளகு, பூண்டு, சோம்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து சிறிது நீர் கலந்து விழுதாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக அரைத்த விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
- பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக நண்டு சேர்த்து கிளறிவிட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து வேகவைக்க வேண்டும்.
- குழம்பு நன்றாக கெட்டியானதும் அதில் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் நண்டு மிளகு வறுவல் தயார்.