புதுச்சேரியில் எஃப்எல்2 புது மதுபான கடை..!! ஒன்று கூடிய பொதுமக்கள்..!!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
புதுக்கோட்டை, அசோக் நகர் பகுதியில் புதிதாக எஃப்எல்2 மதுபான கடை மற்றும் பார் தொடங்குவதையடுத்து அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்….
மதுவை முற்றிலும் ஒழிபதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது., இப்படி இருக்க புதுக்கோட்டை, அசோக் நகர் பகுதியில், புதுக்கோட்டை அறந்தாங்கி சாலையில் பொதுமக்கள் அதிகளவில் கூடும் இடத்தில் எஃப்எல்2 மதுபான கடை மற்றும் பார் திறப்பதற்கு ஜருராக பணிகள் நடைபெற்று வருகிறது…
புது மதுக்கடைகள் வரப்போவதை தெரிந்துக்கொண்ட அப்பகுதி மக்கள் கடந்த ஒரு மாதமாக இந்த பகுதியில் மதுக் கடையை திறக்க கூடாது என்று பொதுமக்கள் அதிகாரியிடம் மனு அளித்துள்ளனர்., ஆனால் மனு அளித்தும், எந்த பயனும் இல்லாத நிலையில், எஃப்எல்2 மதுபான கடை மற்றும் பார் திறப்பதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்..
இந்த நிலையில் இன்று காலை புதுக்கோட்டை – அறந்தாங்கி சாலையில் , அசோக் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று கூடி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணி நேரமாக இந்த போராட்டமானது நடைபெற்று வருகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்..
அப்போது அவர்கள் முன்வைத்த கோரிக்கையானது “எஃப்எல்2 மதுபான கடை மற்றும் பார் திறக்க மாட்டோம் என்று அரசு அதிகாரிகள் உறுதி அளித்து எழுதி கொடுத்தால் மட்டுமே நாங்கள் சாலை மறியலை கைவிட்டு செல்வோம் என்று சமரச பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை மற்றும் வருவாய் துறையிடம் அந்த பகுதி மக்கள் கண்டிப்புடன் கூறிவிட்டதால் தொடர்ந்து பேச்சுவார்த்தையானது நடைபெற்று வருகிறது.
ஒரு மணி நேரத்திற்கு மேலாக நடைபெற்று வரும் சாலை மறியல் போராட்டத்தால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.