மீ கோரெங் செய்வது எப்படி..? பார்க்கலாம் வாங்க…!
தேவையானப் பொருட்கள்:
• ½ மேசைக்கரண்டி எண்ணெய்
• 1 மேசைக்கரண்டி மிளகாய் பேஸ்ட்
• 1 சிறிதாக நறுக்கப்பட்ட வெள்ளைப்பூண்டு
• 2 நறுக்கிய சிறு வெங்காயங்கள்,
• 2 தேக்கரண்டி, வடிக்கட்டப்பட்டு உலரவைக்கப்பட்ட இறால்
• 100 கிராம் இறைச்சி
• 200 கிராம் ஓடுகள் நீக்கப்பட்ட இறால்
• 120 கிராம் சைசிம் இலையிலிருந்து காம்பு பிரிக்கப்பட்டு, 3 சென்டிமீட்டர்
நீளத்திற்கு வெட்டப்பட வேண்டும்
• 300 கிராம் முழுத்தானிய மஞ்சள் நூடல்ஸ்
• ¼ நறுக்கிய முட்டைகோஸ்
• 80 கிராம் தவ்கே
• 2 மேசைக்கரண்டி சோடியம் குறைவான தக்காளி சாஸ்
• 2 சுருள் வெங்காயத்தண்டுகள் 2 சென்டிமீட்டர் நீளத்திற்கு வெட்டப்பட்டது
செய்யும் முறை:
1. ஒரு நான்-ஸ்டிக் பேனில் (non-stick pan) எண்ணெய் ஊற்றி சூடு ஆக்கிக்கொள்ள வேண்டும். அதில் வெங்காயம், பூண்டு மற்றும் மிளகாய் பேஸ்டை கொட்டி 1 நிமிடத்திற்கு நன்றாக வாசனை வரும்வரை வதக்கவும். 2. பின் உலரவைக்கப்பட்ட இறாலை போட்டு, வாசனை வரும்வரை மேலும் 1 நிமிடத்திற்கு வதக்கவும்.
3. அடுத்தது துண்டு கொத்திறைச்சியைத் தொடர்ந்து இறால்களுடன் சேர்த்து 3-5 நிமிடங்களுக்கு வறுக்கவும். கொஞ்சம் நீர் விட்டு வதக்கவும்.
4. பின் சைசிம் தண்டுகளைச் சேர்க்கவும். 1-2 நிமிடங்களுக்குப் பின், சைசிம் இலைகள், நூடல்ஸ் மற்றும் முட்டைக்கோஸ் ஆகியவற்றைச் சேர்க்கவும். காய்கறிகள் நன்றாக மென்மையாக வரும்வரை சமைக்கவும்.
5. அடுத்து தவ்கே, வெங்காயத்தண்டுகள் , தக்காளி சாஸ் ஆகியவற்றை சேர்த்து, நன்றாக கலந்து விடவும்.
6. சூடாகப் பரிமாறவும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
![](https://www.madhimugam.com/wp-content/uploads/2024/07/002-10-x-15-a.jpg)