கோடைக்கு சுரைக்காய் பயன்படுத்தி இப்படி செய்து சாப்பிடுங்க… உடம்பு குளிர்ச்சியா இருக்கும்…
தினமும் வீட்டில் தோசை சுட்டு சாப்பிட்டு அளுத்து போய்டுச்சா? இந்த வெயிலுக்கு சுரைக்காய் இருந்தா இப்படி தோசை செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்க..
தேவையான பொருட்கள்:
* பச்சரிசி – 1 கப்
* துருவிய சுரைக்காய் – 1 கப்
* பச்சை மிளகாய் – 2
* தண்ணீர் – தேவையான அளவு
* உப்பு – சுவைக்கேற்ப
* மிளகு – 1/2 டீஸ்பூன்
* சீரகம் – 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
* கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
* எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
* பச்சரிசியை 5 முறை நன்றாக நீரில் கழுவி, 2 மணிநேரம் நீரில் ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்ஸி ஜாரில் பச்சரிசியைப் போட்டு, தேவையான அளவு நீரை ஊற்றி மெத்துனு அரைத்து எடுக்கவும்.
* பின் அரைத்த பச்சரிசி மாவை ஒரு பாத்திரத்தில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
* பிறகு அதே மிக்ஸி ஜாரில் துருவிய சுரைக்காய், காரத்திற்கு ஏற்றவாறு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து அந்த பச்சரிசி மாவுடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அந்த மாவில் மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி, சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, ரவா தோசை பதத்திற்கு தேவைப்படும் அளவிற்கு நீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடு ஆனதும் கலந்து வைத்துள்ள மாவை அள்ளி தோசை ஊற்ற வேண்டும். பின் எண்ணெய் ஊற்றி தோசையை மிதமான தீயில் பொன்னிறமாக சுட்டு எடுக்க வேண்டும்.
* அவ்ளோதான் சுவையான சுரைக்காய் தோசை தயார். இதனுடன் கார சட்னி, தக்காளி சட்னி மற்றும் தேங்காய் சட்னி அருமையாக இருக்கும்.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
