மொறு மொறுவென ரவா தோசை…!
அரிசி மாவு 1 கப்
ரவை கால் கப்
மைதா கால் கப்
உப்பு தேவையானது
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
வெங்காயம் 1 நறுக்கியது
பச்சை மிளகாய் 1 நறுக்கியது
இஞ்சி 1 துண்டு நறுக்கியது
சீரகம் அரை ஸ்பூன்
மிளகு அரை ஸ்பூன்
தயிர் 2 ஸ்பூன்
கறிவேப்பிலை சிறிது
எண்ணெய் தேவையானது
ஒரு பாத்திரத்தில் ரவை,அரிசி மாவு,மைதா,உப்பு,பெருங்காயத்தூள் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
பின் அதில் நறுக்கிய வெங்காயம்,பச்சை மிளகாய்,இஞ்சி,சீரகம்,மிளகு மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை நறுக்கி அதில் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அடுத்ததாக தயிர் மற்றும் நீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து கலந்து 30 நிமிடங்களுக்கு ஊற விடவும்.
பின் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து மாவை எடுத்து ஊற்றி மேலே எண்ணெய் தடவி மிதமான தீயில் சுட்டு எடுக்கவும்.
அவ்வளவுதான் சுட சுட மொறுமொறுவென ரவா தோசை தயார்.
