சேமியாவை இப்படி செய்து பாருங்க..!
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
தேவையான பொருட்கள்:
வறுக்க
- நெய்
- ஒரு கப் சேமியா
சேமியா பிரியாணி செய்ய
- நெய்
- ஒரு பிரியாணி இலை
- ஒரு பட்டை
- ஒரு ஏலக்காய்
- இரண்டு கிராம்பு
- ஒரு பெரிய வெங்காயம்
- ஒரு தக்காளி
- ஒரு கேரட்
- அஞ்சு பீன்ஸ்
- கால் கப் பச்சை பட்டாணி
- மஞ்சள் தூள்
- இஞ்சி பூண்டு விழுது
- கால் டீஸ்பூன் கரம் மசாலா
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- இரண்டு பச்சை மிளகாய்
- அஞ்சு முந்திரி பருப்பு
- உப்பு தேவையானது
- கொத்தமல்லி இலை
செய்முறை:
- முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.
- பின் அதனை தனியே தட்டில் எடுத்து ஆற விடவும்.
- பிறகு அதே வாணலில் நெய் சேர்த்து பிரியாணி இலை, பட்டை,கிராம்பு, ஏலக்காய் சேர்த்து கிளறி விட வேண்டும்.
- பின் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- வெங்காயம் வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கி பின் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- அடுத்ததாக நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி சேர்த்து கலந்து கிளறி விட வேண்டும்.
- பின் இதோடு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாதூள், பச்சை மிளகாய், முந்திரி சேர்த்து கலந்து கிளறவும்.
- பிறகு இதில் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.
- கொதி வந்ததும் வறுத்து வைத்துள்ள சேமியா கலந்து கிளறி விட வேண்டும்.
- கிளறிவிட்டு சேமியா வெந்ததும் கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.
- அவ்வளவுதான் சுவையான சேமியா பிரியாணி தயார்.