ஆலு ஊத்தப்பம் ரெசிபி..!
தினமும் இட்லி, தோசை என சாப்பிட்டு உங்களுக்கு அளுத்துபோய் இருந்தால் இந்த ஆலு ஊத்தப்பம் ட்ரைப் பண்ணி பாருங்க. ஆரோக்கியமான காய்கறிகள் மற்றும் வேகவைத்த உருளைக்கிழங்கு ஆகியவற்றை வைத்து தயார் செய்தது.
தேவையான பொருட்கள்:
அரிசி 1 கப்
வேகவைத்த உருளைக்கிழங்கு 2
வெங்காயம் 1 நறுக்கியது
கேரட் 1 நறுக்கியது
முட்டைகோஸ் நறுக்கியது
குடைமிளகாய் 1 நறுக்கியது
பச்சை மிளகாய் 2
இஞ்சி 2 ஸ்பூன் துண்டு
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
மிளகுத்தூள் 1 ஸ்பூன்
உப்பு தேவையானது
செய்முறை:
அரிசியை முதலில் நீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து பின் ஊறவைக்க வேண்டும்.
பின் ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த அரிசி, வேகவைத்த உருளைக்கிழங்கு, இஞ்சி, பச்சை மிளகாய், சிறிது தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அரைத்ததும் ஒரு கிண்ணத்தில் மாவை மாற்றவும்.
பின் அதில் கேரட், முட்டைகோஸ், குடைமிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நறுக்கி மாவில் கலந்துக் கொள்ளவும்.
அடுத்ததாக மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் ஊத்தப்பம் கலவையில் ஒரு கரண்டி எடுத்து ஊற்றி சற்று வட்டமாக வாற்த்து வேகவைக்கவும்.
சிறிது நேரம் கழித்து மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான ஆலு ஊத்தப்பம் ரெசிபி தயார்.