ஸ்பைஸி ஓட்ஸ் பான்கேக் ரெசிபி..!
ஓட்ஸ் பயன்படுத்தி செய்யப்படும் இந்த பான்கேக் மிக அருமையான சுவையில் இருக்கும். உங்களுடைய காலை உணவிற்கு பொருத்தமான காய்கறிகள் நிறைந்த சத்தான உணவாகும்.
தேவையான பொருட்கள்:
- ஓட்ஸ் 1 கப்
- கோதுமை மாவு 1/2 கப்
- பால் 1 கப்
- முட்டை 1
- வெங்காயம் 1
- கேரட் 1/4 கப்
- குடைமிளகாய் 1/4 கப்
- சோடா மாவு 1/2 ஸ்பூன்
- உப்பு தேவையானது
- சீரகபொடி 1/2 ஸ்பூன்
- மிளகாய்த்தூள் 1/2 ஸ்பூன்
- வெண்ணெய் தேவையானது
செய்முறை:
- ஒரு மிக்ஸி ஜாரில் ஓட்ஸ் சேர்த்து அரைத்து மாவு போல தயார் செய்து கொள்ளவும்.
- ஒரு அகலமான பாத்திரத்தில் அரைத்த ஓட்ஸ், கோதுமை மாவு, சோடா மாவு, உப்பு, சீரகத்தூள், மிளகாய்த்தூள் ஆகியவற்றை எல்லாம் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
- மற்றொரு பாத்திரத்தில் முட்டை, பால், வெங்காயம், குடைமிளகாய், கேரட் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அடுத்துக் கொள்ள வேண்டும்.
- முட்டை கலவையை மாவு கலவையுடன் கலந்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு ஃபேனை அடுப்பில் வைத்து அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும் தயாரித்த கலவையில் இருந்து கொஞ்சமாக எடுத்து ஊற்றி நன்றாக சிவந்ததும் மறுபக்கம் திருப்பிப்போட்டு வேகவைத்து எடுக்கவும்.
- பின் ஒரு தட்டிற்கு மாற்றி அத்துடன் சாஸ், மற்றும் தயிர் ஆகிய உங்களுக்கு விருப்பமான கலவையுடன் சேர்த்து சாப்பிடலாம்.
- அவ்வளவுதான் ஸ்பைஸி ஓட்ஸ் பான்கேக் ரெசிபி தயார்.