மொச்சை குழம்பு வீடே மணக்கும்..!
தேவையான பொருட்கள்:
உலர்ந்த மொச்சை – 3/4 கப்
புளி – 1 எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
மல்லி தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை சிறிது
வறுத்து அரைப்பதற்கு
எண்ணெய் – 1 டீஸ்பூன்
சின்ன வெங்காயம் – 1/4 கப்
தக்காளி – 1
பூண்டு – 5 பற்கள்
மல்லி – 1 டீஸ்பூன்
தேங்காய் – 1/4 கப்
சோம்பு – 1 டீஸ்பூன்
தாளிக்க
கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்
வெந்தயம் – 1/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிது
சின்ன வெங்காயம் – 8
தக்காளி – 1/2
பூண்டு – 4 பற்கள்
எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
இரவில் மொச்சையை நீரில் ஊறவைக்க வேண்டும்.
புளியை லேசாக சூடாக உள்ள நீரில் ஊறவைத்து கரைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு குக்கரில் ஊறவைத்த மொச்சையை சேர்த்து நீரி ஊற்றி 6 விசில் வரும் வரை விட்டு எடுக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் அதில் வறுத்து அரைப்பதற்கு தரப்பட்டுள்ள பொருட்களை அடுத்தடுத்து சேர்த்து வதக்கி நன்றாக ஆறவைக்க வேண்டும்.
ஒரு மிக்ஸியில் வறுத்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சேர்த்து அதில் தாளிப்புக்கு கொடுத்த பொருட்களை எல்லாம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.
பின் வேகவைத்த மொச்சையை இதில் சேர்த்து கிளறி அதில் புளி நீரை ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு கொதிக்கும் குழம்பில் அரைத்து வைத்துள்ள மசாலா விழுது, ஒரு ஸ்பூன் மிளகாய்தூள், இரண்டு ஸ்பூன் மல்லித்தூள் சேர்த்து கிளறவும்.
கடைசியாக உப்பு சரிபார்த்து அரை கப் நீர் சேர்த்து கொதிக்க வைத்து கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் மொச்சை குழம்பு தயார்.