குட்டையை கிளறிய ரஜினி..!! அமைச்சர் துரைமுருகன் பதிலடி..!! அமைச்சர் உதயநிதி கொடுத்த விளக்கம்..!!
அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த் பேசியது சற்று சர்ச்சையை கிளப்பியுள்ளது.
திமுகவில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த ஒரு பிரச்சனை தற்போது பூகம்பமாக வெடிக்க தொடங்கிவிட்டது.. அதாவது மூத்த தலைவர்கள் வெளியே வந்து பேசும் அளவிற்கு நிலைமை மிக மோசமாகி விட்டது என சொல்லலாம்..
நேற்று அமைச்சர் எ.வ.வேலு எழுதிய “கலைஞர் எனும் தாய்” என்ற புத்தக வெளியீட்டு விழா முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.., அதில் பங்கேற்று பேசிய நடிகர் ரஜினிகாந்த். முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் திமுக ஆட்சியை தீவிரமாக பாராட்டி பேசியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின், மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தனக்கென ஒரு ஸ்டைல் உருவாக்கியுள்ளார்கள்., உதயநிதி ஸ்டாலினுக்கென்று அரசியலில் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கிறது. அந்த வழியில் அவர் செயல்பட்டு கொண்டு இருக்கிறார். குறிப்பாக தனக்கென்று
ஒரு பேச்சு, தனக்கென்று ஒரு அரசியல் செயலில் தனக்கான பாணியை உருவாக்கியுள்ளவர் அமைச்சர் உதயநிதி.
என்னுடைய பாசத்துக்குரிய, தம்பி உதயநிதி கொஞ்சம் நாளாக அரசியலுக்கு வந்து கடினமாக உழைத்து தன்னுடைய பேச்சால் தனக்கென ஒரு பாணியை உருவாக்கியுள்ளார். மக்கள் மத்தியிலும், தொண்டர்கள் மத்தியிலும் பெயர், புகழ் பெற்று உதயநிதி ஸ்டாலின் உச்சியில் இருக்கிறார்.
ஐயா கலைஞர் எப்படிபட்ட விமர்சனங்களையும் ஆக்கப்பூர்வமாக கையாண்டவர்., தற்போது சிலர் அவர்களே விமர்சனம் செய்து கொள்கிறார்கள். அதேசமயம் பிறர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனம் செய்வதும் உண்டு., அடுத்தவர் மனதை நோகடிக்கும் வகையில் விமர்சனங்கள் செய்யக் கூடாது.
ஒரு கட்சியை கட்டி காப்பாற்றுவது கஷ்டம், அதை முதலமைச்சர் ஸ்டாலின் சிறப்பாக செய்துக்கொண்டு இருக்கிறார்., முதலமைச்சர் கையால் இந்த புத்தகத்தை பெற்றதில் பெருமை அடைகிறேன். எப்போதும் பள்ளி ஆசிரியர்களுக்கு புதிய மாணவர்கள் ஒரு பிரச்சனையாக இருக்க மாட்டார்கள். அவர்களை ஈஸியாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது சாதாரண விஷயம் அல்ல..
இங்கு ஏராளமான மாணவர்கள் இருக்கிறார்கள்., அவர்களை சாதாரணமாக பழைய ஸ்டூடன்ஸ் இல்லை. அசாத்தியமானவங்க.. எல்லோரும் ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு போகமாட்டேன் என உட்கார்ந்துட்டு இருப்பாங்க. அவர்களை சமாளிப்பது எல்லாம் சாதாரணமாங்க, என்றும் பாராட்டி கூறினார்.
அதற்கு முதலைமைச்சர் ஸ்டாலின் பதில் அளித்துள்ளார், என்னை விட வயதில் மூத்தவர் என்ற முறையில் சூப்பர் ஸ்டார் அவர்கள் எனக்கு அறிவுரை வழங்கினார்கள்., அதற்கு மிக்க நன்றி. “நீங்கள் சொன்னதை நான் புரிந்து கொண்டேன்.,நீங்கள் பயப்பட வேண்டாம், நான் எப்போதும் கவனமாக இருப்பேன். நீங்கள் மனம் திறந்து பாராட்டியதற்கும் மிக்க நன்றி என பதில் அளித்துள்ளார்.
துரைமுருகன் கோபம் : இதனால் கோபம் அடைந்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “பல்லு போனவர்கள் எல்லாம் சினிமாவில் இன்னும் நடித்துக்கொண்டு இருப்பதால் தான் இன்றைய இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கிறதோ என்னவோ என பேசியுள்ளார்.
அதாவது “ஓல்டு மாணவரான கருணாநிதி கண்ணிலே ஒரு காலத்தில் விரலை விட்டு ஆட்டியவர் துரைமுருகன் என ரஜினிகாந்த் கலாய்த்து பேசியதற்கு., அமைச்சர் துரைமுருகன், “பல்லு விழுந்த நடிகர் ரஜினி” என கோபமாக பேசியுள்ளார்.., ரஜினி அவ்வாறு பேசியது திமுக மூத்த அமைச்சர்களிடையே கோபாம் அடைய செய்துள்ளது..
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தற்போது பேசியுள்ளார்., “மூத்தவர்கள் இளைஞர்களுக்கு வழிவிட்டு, அவர்களை வழிநடத்தி, அரவணைத்து அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்..” இன்றைய இளைஞர்கள் தயாராக தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு மூத்தவர்கள் வழிவிட வேண்டும் என்ற நோக்கில் தான் ரஜினிகாந்த் பேசியுள்ளதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..