முடக்கத்தான் கீரையின் மருத்துவ குணம்..!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான சில முக்கியமான உணவு குறிப்பில் இன்று நாம் பார்க்க இருப்பது.., முடக்கத்தான் கீரை..,
* வாரத்திற்கு இருமுறைக்கு மேல் முடக்கத்தான் கீரை எடுத்துக்கொண்டால், வாதம் சம்மந்தமான நோய்கள் நீங்கி விடும்.
* மேலும் தோல் சம்மந்தமான நோய்கள், வெண் புள்ளிகள் மறைந்து விடும்.
* பசி உணர்வை அதிகரிக்க செய்யும். சிறு வயது குழந்தைகளுக்கு அதிகம் கொடுக்கலாம். ஒரு சில குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம் பண்ணுவார்கள், அவர்களுக்கு கட்டாயம் முடக்கத்தான் கீரை கொடுத்தால் பசி உணர்வையும் தூண்டும். உடலுக்கும் ஆரோக்கியம் கொடுக்கும்.
* மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் நீங்கிவிடும். வயிறு உப்பசம் உள்ளவர்களும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
* கை, கால் வலி மற்றும் மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்கள். முடக்கத்தான் கீரையை அரைத்து ரசமாக செய்து சாப்பிட்டால். மூட்டு வலி நீங்கும். வயதானவர்கள் வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் எடுத்துக்கொண்டால். மூட்டு வலி நீங்குவதோடு, எலும்புக்கும் ஆரோக்கியம் கொடுக்கும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..