ஏலக்காயின் மருத்துவ பயன்கள்..!!
நறுமணம் மிக்கும் எலக்காய் அதிக அளவு மருத்துவ குணமும் கொண்டுள்ளது. ஏலக்காயை உணவில் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நற்பயன்கள் பற்றி பார்க்கலாம்.
* இனிப்பு பலகாரங்களில் ஏலக்காய் சேர்த்துக் கொண்டால், எளிதில் செரிமானம் அடையச் செய்யும். முக்கியமாக வயதானவர்கள் மற்றும் இதயநோய் உள்ளவர்கள் ஏலக்காய் எடுத்துக்கொள்ள வேண்டும்.
* ஏலாதி சூரணம் மற்றும் ஏலாதித் தைலம் போன்றவற்றை சாப்பிட்டு வர வயிற்று எரிச்சல் போன்ற பிரச்சனை குணமாகும்.
* அல்சர் பிரச்சனை உள்ளவர்கள், ஏலக்காய் பொடியை ஒரு சிட்டிகை அளவு பாலில் கலந்து குடித்தால் அல்சர் பிரச்சனை சரியாகிவிடும்.
* கபம் மற்றும் பித்தத்திற்கு ஏற்றது.
* ஏலக்காயில் மாங்கனீசு மற்றும் துத்தநாகம் போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் இனிப்பு மற்றும் பிரியாணி போன்றவைகளில் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு நல்லது.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..