குடம்புளியும் அதன் மருத்துவ குணமும்..!
மலபார் புளி என்று அழைக்கப்படும் குடம் புளியில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பார்க்கலாம்.
* குடம்புளி கெட்ட கொலஸ்ட்ராலை கரைக்கும் தன்மை கொண்டது.
* மீன் குழம்பில் இதை பயன்படுத்தும் போது, அதில் இருக்கும் கொழுப்புக்களை இந்த புளி எடுத்துவிடும்.
* குடம்புளி சுவை மிகுந்தவையாக இருந்தாலும், அவற்றை அளவுடன் பயன்படுத்த வேண்டும் இல்லை என்றால், உடலில் அமிலத்தன்மையை அதிகரித்துவிடும்.
* குடம்புளியை சமையலில் சேர்த்து சாப்பிட்டு வந்தால், ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, உடல் அழற்சி பிரச்னையை சரியாக்கி விடும்.
* குடல் சார்ந்த பிரச்சனை நீங்க குடம்புளியை 3மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து, அரைத்துக் கொள்ளவும், அதனுடன் சிறிதளவு வெல்லப்பாகு, ஏலக்காய், சீரகத்தூள் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து சர்பத் போல குடித்து வந்தால், குடல் சார்ந்த பிரச்சனைகள் நீங்கி விடும்.
மேலும் இதுபோன்ற பல ஆரோக்கிய குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post