நுரையீரலை சுத்தம் செய்ய இதை செய்தால் போதும்..!
நுரையீரல் என்பது நம் வாழ்வதற்கு நம் உடலில் உள்ள உறுப்புக்களில் ஒரு முக்கிய பகுதியாகும். நாம் மூச்சு காத்து சுவாசிப்பது நுரையீரல் மூலம் தான். அந்த நுரையீரலை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் தலையாயக் கடமையாகும். இன்றைய காலகட்டத்தில் வாகன உற்பத்தியும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவுகளும் காற்று மாசுபாட்டை வெகுவாக அதிகரித்து சுற்றுச்சூழலை பாதிக்க செய்து நம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய காற்றை வழங்குகிறது.
தினமும் உடற்பயிற்சி நடை பயிற்சி மேற்கொள்வதன் மூலம் உடலில் உள்ள உறுப்புக்கள் சரியாக இயங்க முடியும். அந்த வகையில் அதற்கு ஏற்ற உணவு முறையும் நாம் கவனத்துடன் கையாள வேண்டும். இயற்கையாக நம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நுரையீரலை எவ்வாறு சுத்தம் செய்வது என்பதை பார்க்கலாம்.
தினசரி உணவில் மஞ்சள் சேர்த்துக் கொள்வது தெளிவான மற்றும் ஆரோக்கியமான நுரையீரலை பராமரிக்க உதவும்.
மஞ்சள் ஆன்டிபயாட்டிக் என்பதால் நுரையீரலில் கிருமிகள் தேங்காமல் பாதுகாக்கும்.
ஆயுர்வேத பொருளான அதிமதுரம் பல காலமாக சுவாசக் கோளாறுகளை குணப்படுத்தும் வல்லமை கொண்டது. இது நுரையீரலில் சலிகளை வெளியேற்றுவது எளிதாக்கும்.
இது மூச்சுக் குழாய் அழற்சி தொண்டைப்புண், போன்றவற்றை சரி செய்யும். அதிமதுரம் தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் நுரையீரலை சுத்தப்படுத்தவும், சுவாசக் கோளாறுகளை தடுக்கவும் பயன்படுகிறது.
பலவிதத்தில் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் மொழியாக அமைந்துள்ளது. இஞ்சி உணவில் சேர்க்கப்படும் பொருள் என்பதை தாண்டி, ஒரு சக்தி வாய்ந்த மருந்தாகும்.
இஞ்சி தொண்டை கரகரப்பிற்கும் நுரையீரல் சுத்திகரிப்பு சுவாச செயல்பாட்டை மேம்படுத்த உதவும். காற்றுப்பாதையில் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும்.
துளசி என்பது கடவுளுக்கு மட்டும் உகந்ததல்ல, மனிதருக்கும் சிறந்த மருந்தாக பயன்படுகிறது. துளசி ஆயுர்வேதத்தில் நுரையீரலை சுத்தப்படுத்தும் திறன் உட்பட ஏராளமான ஆரோக்கிய நன்மைகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.
துளசியில் சக்தி வாய்ந்த ஆக்சிஜனேற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை உள்ளது. இது சுவாச பாதையில் ஏற்படும் வீக்கத்தையும் சுவாச நெரிசலையும் தடுக்க உதவுகிறது. துளசியை நேரடியாகவோ அல்லது கசாயம் வைத்து குடித்து வர உடலில் பல நன்மைகள் ஏற்படும்.
அதாத்தோட வாசகா மலபார்நட் என்று அழைக்கப்படும். அதாத்தோட வாசகா நுரையீரலை சுத்தப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்ற மூலிகையாகும். இது மூச்சு குழாய் அழற்சி, இருமல், சளியை போக்கவும் மற்றும் ஒட்டுமொத்த நுரையீரல் செயல்பாட்டையும் மேம்படுத்தவும் உதவுகிறது.
நாம் கெட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரல் பாதிப்படைகிறது . காற்று மாசு புகையினால் பாதிக்கப்படும் நுரையீரலை சுத்தப்படுத்த வீட்டில் உள்ள பொருட்களை நாம் தினசரி உணவில் சேர்த்து உண்பது நல்லது..
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..