இனி வீட்டிலே பாப்கார்ன் சிக்கன் ரெசிபி செய்ங்க..!
பாப்கார்ன் சிக்கன் என்பது நாம் சாப்பிடும் பாப்கார்ன் போலவே கடித்த அளவில் மென்மையாகவும் மிருதுவாகவும் சுவை கூடுதலாகவும் இருக்கும் ஒரு சிக்கன் வகையாகும்.
இதனை பார்க்கும்போது பாப்கார்னை நினைவூட்டும் விதமாக இருப்பதால் இதற்கு பாப்கார்ன் சிக்கன் என பெயர் குறிக்கிறது. ஆனால் இந்த பாப்கார்ன் சிக்கனை குழந்தைகளுக்கு நான் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி செய்து கொடுத்தீங்கனா ரொம்ப விரும்பி இன்னும் வேணும் என்று கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. வாங்க எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- ஒரு துண்டு இஞ்சி
- இரண்டு பல் பூண்டு
- ஒரு சின்ன துண்டு வெங்காயம்
- ஒரு கப் தயிர்
- இரண்டு முட்டை
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- உப்பு
- கால் டீஸ்பூன் மிளகுத்தூள்
- 250 கிராம் எலும்பு இல்லாத சிக்கன்
- ஒரு கப் மைதா மாவு
- அரை கப் சோள மாவு
- அரை டீஸ்பூன் மல்லித்தூள்
- ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
- அரை டீஸ்பூன் சீரகத்தூள்
- உப்பு தேவையானது
- எண்ணெய்
- தயார் செய்து வைத்த சிக்கன்
செய்முறை:
ஒரு மிக்ஸி ஜாரில் பூண்டு, இஞ்சி, வெங்காயம் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
பின் இதனை வடிகட்டி இதன் சாறை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு கிண்ணத்தில் முட்டை, தயிர், வடிகட்டி வைத்துள்ள சாறு, மிளகாய்த்தூள், மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து பின் எலும்பில்லாத சிக்கன் சேர்த்து நன்றாக கலந்து 5 மணி நேரத்திற்கு ஊற வைக்க வேண்டும்.
சிக்கனை கோட் செய்வதற்கு ஒரு பாத்திரத்தில் மைதா மாவு, சோள மாவு, மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் தேவையான உப்பு சேர்த்து கலந்து ஊறவைத்த சிக்கனை இதில் முக்கி எடுத்து ஒரு தட்டில் வைக்கவும்.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் சிக்கன் சேர்த்து மிதமான தீயில் இருபுறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
அவ்வளவுதான் பாப்கார்ன் சிக்கன் டேஸ்டியா தயார் ஆகிவிட்டது.
