விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவனுக்கு நேர்ந்த சோகம்..!
விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் எதிர்பாரதவிதமாக கண்மாயில் விழுந்து உயிரிழந்தார்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அலங்கம்பட்டியைச் சேர்ந்த தம்பதியினரின் மகன் தர்நேஷ். இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 7 தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீட்டில் வணங்கப்பட்ட களிமண்ணால் ஆன விநாயகர் சிலையை, சிறுவன் கரைப்பதற்காக சைக்கிளில் சென்றுள்ளார்.
அதற்காக அப்பகுதியில் உள்ள பெரியகுளம் கண்மாயிக்கு சென்றபோது எதிர்பாரத விதமாக சிறுவன் மூழ்கியுள்ளான். உடனே இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் சிறுவனை மீட்டு அருகில் இருந்த மேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.
அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்து மருத்துவமனைக்கு விரைந்த போலீசார் இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விநாயகர் சிலையை கரைக்க சென்ற சிறுவன் எதிர்பாரதவிதமாக கண்மாயில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.