சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் பாகற்காய் விதை..!
பயன்படுத்தாமல் தூக்கி எறியும் பாகற்காய் விதைகளில் பலவித சத்துக்கள் அடங்கியுள்ளன. இது ரத்த சர்க்கரை அளவை சீராக வைக்கிறது. இது புற்றுநோயை எதிர்க்கக்கூடியதாகவும் செயல்படுகிறது. உடல் எடை குறைவுக்கும் பயன்படுகிறது. அவ்வளவு சத்துக்களை கொண்ட பாகற்காய் விதையை வைத்து கசப்பே தெரியாத பச்சடி செய்யலாம் வாங்க…
பாகற்காய் விதை மற்றும் உள் சதைப் பகுதி- 1கப்
வறுத்த எள்- 1 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் – 4
உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, சீரகம் தலா- 1 டீ ஸ்பூன்
கொத்தமல்லி தழை – 1 கைப்பிடி
புளி-சிறிது
எண்ணெய் – 2 ஸ்பூன்
உப்பு -தேவையான அளவு
வெல்லம்- சிறிது.
ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய் விதையை போட்டு வறுத்து தனியாக எடுத்து வைக்கவும்.
அதே வாணலில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றி பருப்பு வகைகள், சீரகம், பெருங்காயம், வரமிளகாய் ஆகியவற்றை வறுத்து எடுக்கவும். வறுத்த அனைத்தைவும் உப்பு, வறுத்த எள், வெல்லம்,மல்லிதழை சேர்த்து நீர் ஊற்றி அரைத்து கொள்ளவும்.
இந்த பச்சடியை சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ரொம்ப நல்லது. கர்பினிகள் மற்றும் இளம் தாய்மார்கள் பாகற்காய் விதையை சாப்பிடக் கூடாது.