கோவில் உண்டியல் பணத்தில் கைவரிசை காட்டிய பெண்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..!
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருத்தணி முருகன் கோவிலுக்கு நாள்தோறும் பக்தர்கள் கூட்டம் வந்த வண்ணம் இருக்கும். இங்கு வருகை தரும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு தங்களது நேர்த்தி கடனாக மலைக்கோவிலில் உள்ள உண்டியலில் பணம், நகை போன்ற பொருட்களை காணிக்கையாக செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை கோவில் இணை ஆணையர் அருணாச்சலம், அறங்காவலர்கள் சுரேஷ்பாபு, நாகன், மோகனன் உள்ளிட்டோர் முன்னிலையில் நேற்று எண்ணப்பட்டது.
அப்போது, உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டிருந்த திருக்கோவிலின் பணி பெண்கள் 2 பேர் பணத்தை திருடுவது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது.
பின்னர் இது தொடர்பாக கோவில் நிர்வாகம் திருத்தணி போலீசாருக்கு தகவல் அளித்தது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் திருட்டில் ஈடுபட்ட 2 பெண்களிடம் பெண் காவலர் சோதனை மேற்கொண்டபோது, அவர்களிடமிருந்து ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் கோவில் காணிக்கை பணத்தை பறிமுதல் செய்தனர்.
பின்னர் அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் ஆர்.கே.பேட்டை தாலுகா வீரமங்கலம் பகுதியை சேர்ந்த தேன்மொழி, நாகபூண்டி கிராமத்தை சேர்ந்த வைஜெயந்தி என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 2 பெண்களையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”