ஆசையாக சாப்பிடும் உணவுகள் ஆபத்தா..? ஆரோக்கியமா..? கெடுதல் உணவை கண்டு பிடிப்பது எப்படி..?
மனிதர்களின் மிகப்பெரிய செல்வம் எதுவென்றால் அது ஆரோக்கியம்தான். ஒருவரின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டால் அவர்களிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அது பயனற்றதுதான்.
பொதுவாக ஆரோக்கியம் மோசமாக பல விஷயங்கள் காரணமாக இருந்தாலும் முக்கிய காரணமாக இருப்பது ஒருவரின் உணவுமுறைதான்.
ஒருவர் தங்களின் உணவுமுறையை மாற்றியமைக்காமல் ஒருபோதும் நல்ல ஆரோக்கியத்தை அடைய முடியாது. பொதுவாக மக்கள் அதிக விலைக்கு விற்கப்படும் பொருட்களே ஆரோக்கியமானது என்ற எண்ணத்தில் உள்ளனர்.
ஆனால் அது எந்த அளவிற்கு உண்மை என்பது அது எந்த பொருள் என்பதைப் பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது என்று பிரபல சமையல் நிபுணர் விஜயகுமார் பகிர்ந்துள்ளார். இந்த பதிவில் உணவுமுறைப் பற்றி அவர் கூறியுள்ள சில விஷயங்கள் மற்றும் உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
விலை அதிகமாக இருக்கும் பொருள் சிறந்ததா..? இல்லையா..? பார்க்கலாம் வாங்க..
பொதுவாகவே மக்களுக்கு அதிகமாக விலை கொடுத்து வாங்கும் பொருட்கள் தான் நன்றாக இருக்கும் என்கிற எண்ணம் சில பேருக்கு இருக்கிறது. ஆனால் அது தவறானது சொல்லிகிறார்கள்.
எந்தெந்த உணவுகள் விலை அதிகம், குறைவு அதில் இருக்கும் சத்துகள் என்ன என்ன இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க, உதாரணமாக, முந்திரி பருப்பின் விலை ரொம்ப அதிகம், அதற்கு மாற்றாக நம் சமையல் அறையில் இருக்கும் பொட்டுக்கடலை சேர்த்து அரைத்து பயன்படுத்தினால் அதே சுவையை பெற முடியும் என்று உண்மை தான்..
அதே போல் கிவி பழத்தின் விலை அதிகம் அதில் இருக்கும் வைட்டமின் சி அளவு 95 மில்லி கிராம் தான். ஆனால் விலை குறைவாக கிடைக்கும் நெல்லிக்காயில் 300 மில்லி கிராம் அளவு இருக்ககுதாம், நெல்லிக்காயை இரண்டு ஆரஞ்சு பழத்திற்கு நிகராகவும் இருக்கிறது.
அதே போல மீன்களில் வஞ்சரம் மீன் விலை அதிகமாக இருக்கும், ஆனால் வஞ்சரம் மீனிற்கு என்று தனி சுவை எதுவும் கிடையாது, அதன் மசாலாவே சுவையை கூட்டுகிறது.
வஞ்சர மீனிற்கு மாற்றாக, நீங்கள் தவா ஃப்ரை செய்ய கானாங்கெளுத்தி, ஜிலேபி, மற்றும் வௌவ்வால் மீனில் மசால் சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். டீப் ஃப்ரை செய்ய நெத்தலி, கொடுவா, மற்றும் நெய் மீன் போன்றவை அட்டகாசமாக இருக்கும். குழம்பு செய்ய மத்தி, சங்கரா, மற்றும் அயிலை மீன் பொருத்தமான தேர்வாக இருக்கும்.
கலரை பார்த்து தேர்வு செய்வது எப்படி..?
கலரை பார்த்து மனிதர்களை பற்றி முடிவு செய்வது தவறு என்பது நமக்கு தெரிந்த ஒன்று தான். அதே போல் கலரை பார்த்து உணவை தேர்வு செய்வதும் தவறு தான் என்கிறார் நம் செஃப்.
உதாரணமாக, பஞ்சு மிட்டாய் சமீபமாக தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் தடை செய்யப்பட்டது. பஞ்சுமிட்டாயில் பிரச்சனை இல்லை, அது வெறும் சர்க்கரையால் செய்யப்படுவது. ஆனால், அதில் சேர்க்கப்பட்ட கலரில் ரோடாமைன் பி என்னும் கெமிக்கல் இருக்கிறது.
இதை சாப்பிடுபவர்களுக்கு கேன்சரை ஏற்படுத்தும் தன்மை உடையது. பஞ்சு மிட்டாயில் மட்டும் தான் கலர் இருக்கிறது என நினைக்கிறீர்களா..? அதான் இல்லை
நாம் பெரும்பாலும் கடைகளில் சாப்பிடும் உணவு வகைகளான கபாப், தந்தூரி, க்ரில், மஞ்சூரியன், மற்றும் சட்னியில் கூட கலரை அதிகரிக்க செயற்கை நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. பெரும்பாலும் ஸ்பூனில் சாப்பிடுவதை விட கைகளில் சாப்பிடும் போது இவற்றை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
கைகளில் சாப்பிடும் போது நிறம் உங்கள் கைகளில் ஓட்டினால், அந்த உணவு வகைகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.
ரோட்டுக்கடை உணவு நல்லதா…? இல்லையா..?
ரோட்டுக்கடை கடை உணவு பாதுகாப்பானது தான் என்கிறார் நம் செஃப். உணவின் ஆபத்தான நிலை என்பது 4 டிகிரி முதல் 60 டிகிரி வரை இருக்கும். பெரும்பாலும் நாம் ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவுகள் சமைத்து சூடாகவோ அல்லது ஆறிய உணவாகவோ இருக்கும். சமைக்கப்பட்ட உணவுகளில் பெரும்பாலும் பாக்ட்ரியாக்கள் இருக்காது. முடிந்த வரை ரோட்டு கடைகளில் சாப்பிடும் உணவுகளை 4 டிகிரிக்கு குறைவாகவோ அல்லது 60 டிகிரிக்கு அதிகமாவோ இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும். உணவு சுகாதாரமான முறையில் சுத்தமான பாத்திரங்களில் பரிமாறப்படுகிறதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
– கவிப்பிரியா
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..