ஒரு விரல் உலகை ஆளுகிறது…! டிஜிட்டல் உலகிற்கு நாம் அடிமையா..? இல்லை ஆக்கப்பட்டோமா..?
இதை படித்ததில் பிடித்தது என்றதை சொல்வதை விட நாம் அதிகம் சிந்திக்க வேண்டிய ஒன்று என சொல்லலாம்.. ஏனா இந்த ஒரு ஸ்மார்ட் போன் வந்தாதால் நாம் வாழ்வில் எவ்வளவு மாற்றங்கள் என சொல்லலாம்.. நாம் எத்தனை விஷயங்களை மறந்து விட்டோம் என சற்று சிந்தித்து பாருங்கள்…
1. ஸ்மார்ட் வாட்ச் வந்தது., கடிகாரம் பார்க்கும் நேரம் குறைந்தது..!!
2. பேட்டரி லைட் வந்தது., மின்மினி விளக்கு மறந்து போனது..?
3. அலைபேசியில் பேச ஆரம்பித்தோம் தபால் அட்டைகளை மறந்தோம்..
4. டிஜிட்டல் கிளாஸ் வந்தது புத்தகங்களை முழுங்கியது
5. ஐ பாட் வந்தது ரேடியோ மறக்கடித்தது
6. வாய்ஸ் ரெக்கார்டரால் டேப் ரெக்கார்டரை மறக்க செய்தது..
7. ஒரு விஷேஷங்களுக்கு சென்றால் கூட கேமராவை பார்த்து போட்டோ எடுப்பவர்களை விட செல்பி எடுப்பவர்களே அதிகம்..
8. இது கால்குலேட்டரை மறக்க செய்தது
9. முகநூல் நண்பர்களுடன் பேசி அக்கம் பக்கம் உறவுகளை இழந்தோம்..
10. இது உறவையும் மறக்கடித்தது
11. இது நம் நினைவாற்றலை நுகர்ந்தது
ஆனால் அந்த காலத்தில் தியேட்டருக்கு சென்றது இல்லை என்றாலும்., தெருகூத்து நாடகம் பார்க்க மறந்தது இல்லை,
தொலைக்காட்சி வசதி இல்லை, ஆனால் எப்போதும் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்..
விளையாட்டுக்கு பஞ்சம் இல்லை, சூரியன் உதயத்துக்கு முன் எந்திரித்து விளையாட ஆரம்பித்து இரவு நிலா சோறு சாப்பிட்டு விட்டு தான் உறங்குவோம்..
வாரத்திற்கு ஒரு முறை சந்தைக்கு சென்று வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொண்டு வருவோம்.., அந்த ஒரு நாள் சந்தைக்காக 6 நாள் காத்திருப்போம்..
ஆனால் இப்போது இதுவே வங்கி, இதுவே ஹோட்டல், இதுவே மளிகைக் கடை, இதுதான் மருத்துவர், இதுதான் ஜோதிடர்., இதுதான் சந்தை.., வெளியே போக வேண்டும் என்றால் கூட ஆட்டோ கார் புக் செய்யும் வசதி எல்லாமே இதிலே.. இதுவே ஸ்மார்ட்போன்களின் சாம்ராஜ்யம்…
ஒரு விரல் உலகை ஆளுகிறது…! அதே விரல் மனிதனின் வாழ்க்கையை ஆளுகிறது…!
வாய் முடக்கப்பட்டுள்ளது.., உண்மைதான்.. தொட்டால்தான் வாழ்க்கை.. ஆனால் யாரும் தொடர்பில்லை… ஒன்னாக கூடி இருந்தாலும் இது சிணுங்கினால் போதும் ஒதுங்கி தனியாக சென்று விடுவார்கள்…
நம் வேலையை எளிமையாக்க இது கண்டு பிடிக்கப்பட்டது என்றால்..? அதற்கு ரீசார்ஜ் செலவு Subscription செலவு என இருக்கு. இது வந்ததால் நாம் ஸ்மார்ட் போனுக்கு அடிமையா இல்லை..? நம்மை அதற்கு அடிமையாக்க இந்த வசதிகளா..? கொஞ்சம் சிந்தியுங்க மக்களே..!!