பருத்தி பால் உடலுக்கு நல்லதா..? இந்த பிரச்சனைகள் நீங்க..!!
எண்ணற்ற மருத்துவ குணம் நிறைந்த பருத்தி பால் பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க
பொதுவாக, தாவரங்களின் விதைகளில் இருந்து பெறப்படும் பால் அதாவது, தேங்காய் பால், பாதாம் பால், பருத்தி பால் போன்றவை அனைத்துமே நம்முடைய உடலுக்கு ஆற்றலையும் வலிமையையும் தர கூடியவை.
அந்தவகையில், பருத்தி விதையிலிருந்து தயாரிப்பதுதான் பருத்தி பால். பருத்தி விதைகளில், வைட்டமின்கள், புரதங்கள், ஆன்டி ஆக்சிடண்ட்டுகள், கொழுப்பு அமிலங்கள், கனிமச் சத்துக்கள் போன்றவை அதிகமாக நிறைந்துள்ளன.
சத்துக்கள் பற்றி ஒரு சிறு தொகுப்பு :
இந்த பருத்தி விதையுடன் பச்சரிசி, சுக்கு, கருப்பட்டி, ஏலக்காய், மிளகு, திப்பிலி, சித்தரத்தை, தேங்காய்ப்பால், கடலைப்பருப்பு, முந்திரி போன்ற அனைத்தும் சேர்க்கப்பட்டு பருத்தி பால் தயாராகி விடும்.
இந்த பொருட்கள் அத்தனையும் மூலிகை என்பதால், உடலுக்கு நன்மையை தருகின்றன.
பருத்தி விதையுடன் கருப்பட்டியும் பச்சரிசியும் சேர்க்கப்படுவதால் போதுமான கால்சியம் சத்துக்கள் சேருகின்றன.
இந்த சத்துக்கள் எலும்புகளையும், பற்களையும் உடலையும் வலுவாக வைத்துக்கொள்ள உதவுகின்றன.
பருத்தி விதையில் நார்ச்சத்துக்கள் அதிகமாக உள்ளதால், மலச்சிக்கல் தீர்கின்றன. மேலும் அஜீரண கோளாறும் நீங்குகின்றன. இதனால் குடல் ஆரோக்கியம் காக்கப்படுகின்றன.
குளிர்காலங்களில் பருத்தி பால் குடித்தால், சுவாச கோளாறுகள் தீரும், நெஞ்சு சளி, இருமல், தொண்டை வலிக்கு நிவாரணம் தரக்கூடியது இந்த பருத்தி பால்..
பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் சுரப்பை அதிகரிக்கக்கூடியது என்று சொல்லப்படுது. அதனால், கர்ப்ப காலத்திலும், பாலூட்டும்போதும் பருத்தி பால் குடித்து வரலாம்.
அதேபோல் ரத்த அழுத்த பிரச்சனை உள்ளவர்கள் பருத்தி பால் சாப்பிடலாம்.
மாதவிடாய் இருப்பவர்கள், அல்லது மாதவிடாய் நேரத்தில் வலியால் அவதிப்படுபவர்கள் பருத்தி பால் குடித்து வரலாம். இதனால், அடிவயிற்றுப் பகுதியிலுள்ள பெல்விக் எலும்புகள் உறுதிப்பெறும் என்று சொல்லப்படுது.
அல்சர் இருப்பவர்கள் கட்டாயம் குடிக்க வேண்டிய பானம் இதுவாகும். வளரும் குழந்தைகளுக்கு பருத்தி பால் தருவதால், கால்சியம் சத்து அதிகமாக கிடைக்கும். அதே போல சிலருக்கு பசும்பால் அலர்ஜி இருக்கும். அவர்கள் இந்த பருத்திப்பால் தாராளமாக குடிக்கலாம்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..