இரவில் நீங்களும் இதே பண்ணுவீங்களா..? அப்போ இது உங்களுக்கு தான்..!!
இரவு என்பது ஒரு இனிய வேளை என்று சொல்லலாம் அந்த வேளையில் மட்டுமே பலரும் துக்கம் மறந்து தூங்குவது உண்டு, ஒரு சிலருக்கு இரவில் தூக்கம் வராமல் சிந்தித்து கொண்டு இருக்கும் பழக்கம் உண்டு, அதிலும் சிலர் இரவில் இனிமையான பாடல்கள் அல்லது சோகப்பாடல்கள் கேட்டுக்கொண்டு தூங்கும் பழக்கம் உண்டு.. ஆனால் இப்படி ஒவ்வொரு விதமாக இரவில் நம்முடைய சிந்தனைகள் மாறும் புது உடல் ஆரோக்கியத்திலும் மாற்றம் ஏற்படும் என சொல்கிறார்கள். அதைப்பற்றி விரிவாகப்பார்க்கலாம்.
துன்பம் மறக்கும் தூக்கம் :
இரவில் ஒரு சிலர் தங்களுடைய கவலைகள் மறந்து தூங்குவார்கள்., அப்படி தூங்குபவர்கள் மனதும் இதயமும் என்றும் ஆரோக்கியமாக இருக்கும் என சொல்லுவார்கள்..
எந்த சிந்தனையும் இன்றி இரவில் தூங்கும் முன் நல்லதை நினைத்துக் கொண்டு தூங்கலாம் அல்லது தூங்குவதற்கு முன் 10ல் இருந்து ஒன்று வரை பின்னோக்கி எண்ணலாம்.. அப்படி 10 நிமிடங்கள் நாம் பின்னோக்கி எண்ணும் போது சிந்தனையும் கவலையும் மறந்து விடும் என சொல்லுவார்கள்.
பாட்டு கேட்டுக்கொண்டு தூங்குவது..
இந்த பழக்கம் நூற்றில் 45% பேருக்கு மட்டும் இந்த பழக்கம் இருப்பதாக சொல்லுகிறார்கள். அப்படி இரவில் நாம் பாடல்கள் கேட்டுக்கொண்டு தூங்கும் போது மனது பாரங்கள் நீங்கி பாடல் வரிகளை நம் மூளை சிந்தித்து மனதில் அந்தப் பாடல் ஒலிக்கும் போது மனதின் கவலைகள் நீங்கி விடும் என சொல்கிறார்கள்.
இதனால் ஸ்ட்ரெஸ் எல்லாம் நீங்கி விடும் என சொல்லுகிறார்கள்..
சிந்தனையோடு தூக்கம் :
இந்த பழக்கம் தான் பலருக்கும் இருப்பதாக அதாவது 100ற்றில் 89% பேருக்கு இருப்பதாக சொல்கிறார்கள்.. இந்த பழக்கம் மட்டுமே நமது உடலிற்கும் மனதிற்கும் கேடு விளைவிப்பதாக சொல்கிறார்கள்.
அதாவது இரவில் நாம் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்டு தூங்குவதால் மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படுத்துவதோடு இதயத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும் என சொல்கிறார்கள். எப்போதும் மூளைக்கு சிந்தனை கொடுப்பது மூளை நரம்புகளில் பாதிப்பை ஏற்படுத்தி, நரை முடி, தலை வலி போன்றவற்றை உண்டாக்கு கிறது.
இது மட்டுமின்றி அதிக சிந்தனை மட்டுமே பல நோய்களுக்கு காரணம் என சொல்கிறார்கள்.. சிந்தனைகளை தவிர்த்து உறக்கத்தை மேற்கொள்வதே உடல் ஆரோக்கியமாக வைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்..
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..