இந்தியா vs பாகிஸ்தான் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி தேதி மாற்றம்..!!
50 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் வருகின்ற ஆகஸ்ட் 5ம் தேதி தொடங்கி நவம்பர் 19ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ளது. அதில் இந்தியா VS பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அக்டோபர் 15ம் தேதி நடைபெற போவதாக இருந்தது அன்றைய தினத்தில் நவராத்திரி கொண்டாட இருப்பதால் பாதுகாப்பு வழங்க முடியமால் போகும்.., என மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ள இந்த போட்டிக்கு ஒரு நாளைக்கு முன் அக்டோபர் 14ம் தேதி அதே மைதானத்தில் நடத்த பிசிசிஐ மற்றும் ஐசிசி ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. அதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சில போட்டிகளின் தேதிகள் மற்றும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது.
இந்தியா VS பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 14ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
இலங்கை VS பாகிஸ்தான் அணி அக்டோபர் 12ம் தேதியில் இருந்து அக்டோபர் 10 ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது.
நியூசிலாந்து VS வங்கதேசம் அக்டோபர் 13ம் தேதி நடைபெறும் எனவும் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் போட்டிகள் ஒரு நாளைக்கு முன் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த போட்டி மாற்றம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.
கதைகள் – 75 | தொடர்கதை – 2 | க்ரைம் – 572 + | கவிதை – 150 + | Written – 3000 +
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..