நகைச்சுவை நடிகர் சார்லி பற்றி ஒரு ரகசியம்..!!
நகைச்சுவை வேடமாக இருந்தாலும் குணச்சித்திர வேடமாக இருந்தாலும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்துபவர் டாக்டர் .வேல்முருகன் என்கிற சார்லி கிட்டத்தட்ட 800 படங்களுக்கு மேல் நடித்திருந்தாலும், இவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதை நினைத்து அவர் பலமுறை வருந்தியதுண்டு.
ஆங்கிலத்தில் Unsung Hero என்ற வார்த்தைக்கு மிக கன கச்சிதமான உதாரணம் இவரே தான், காண்ட்ராக்டர் நேசமணியை கொண்டாடிய நாம் , என்னவோ நம் கோவாலுவை அந்த அளவிற்கு கொண்டாட மறந்துவிட்டோம் .
தலையில் அடிபட்டு அனைத்தையும் மறந்த நம் கோவாலுவின் வெள்ளேந்தியான முகபாவனைகள் மற்றும் வாய்ஸ் மாடுலேஷன் நடிப்பின் உச்சம் .இவரை தவிர எனக்கு தெரிந்து யாரும் அந்த கதாபாத்திரத்தை அவ்வளவு சரியான அளவுகோலோடு நடித்திருக்க வாய்ப்பில்லை .
அதே போல் வெற்றிகொடிக்கட்டு திரைப்படத்தில் கஷ்டப்பட்டு சம்பாரித்த பணத்தை இழந்து, ஊர் ஊராக சுற்றித்திரியும் கதாபாத்திரம் . குறிப்பாக பார்த்திபனை சந்திக்க வரும் ஒரு காட்சியில் ,ஒரு பைத்தியக்காரன் போல் அவர் நடிக்கும் நடிப்பு ,நடிப்பு என்பதையும் தாண்டி ,அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருப்பார் .
சமீபத்தில் ,”Humour in Tamil Cinema” என்ற தலைப்பில் ,நம் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் PhD படிப்பை முடித்தார். பழம்பெரும் குணச்சித்திர நகைச்சுவை நடிகர் நாகேஷ் போன்று உயர் அங்கீகாரத்தில் இருக்க வேண்டிய அவரை, நம் திரைத்துறை இவரை பயன்படுத்த, கொண்டாட மறந்துவிட்டது .
Discussion about this post