இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்த பும்ரா..!! அயர்லாந்து டி20யின் கேப்டன் யார் தெரியுமா..?
தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் “ஐஸ்ப்ரித் பும்ரா” உடலில் ஏற்பட்ட காயத்திற்காக ஓராண்டு காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கடைசி சர்வதேச போட்டியில் விளையாடினார்.
2022ம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பை டி20க்கு முன் நடைபெற்ற தென்ஆப்ரிக்காவுடன் ஏற்ப்பட்ட போட்டியில், பும்ராவிற்கு முதுகில் காயம் ஏற்பட்டது. இதனால் அவரால் உலக கோப்பை டி20 பைனல்ஸ் மேட்சில் கலந்து கொள்ள முடியாமல் போனது.

இந்த காயம் காரணமாக நியூஸ்லாந்தில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அவர் சில காலம் ஓய்வில் இருந்தார். பெங்களுருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (NCA) ரீஹேப்பிளாக பும்ரா இருந்ததால் இந்தியன் பிரீமியர் லீக், உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை..,
பும்ரா இல்லாததால் இந்திய அணியும் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெரிய அளவில் தோல்வியை சந்தித்தது. ஆர்சார் மற்றும் பும்ரா இல்லாமல் திணறிய மும்பை இந்தியன்ஸ் அணி அவர்களின் கம்பேக்கிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்துள்ளது. இந்திய பந்து வீச்சாளர்களில் ஒருவர் இல்லாதது ஒட்டு மொத்தமாக அந்த அணியை பாதித்துள்ளது.
எனவே இந்திய கட்டு பாட்டு வாரியம் பும்ரா விடம் சென்று பேச்சு வார்த்தை நடத்தை கம்பேக் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். பும்ரா மீண்டும் கம்பேக் கொடுக்க ஒப்புக்கொண்டதால் அவரை இந்த அணியின் கேப்டனாக பிசிசிஐ நிறுவனம் அறிவித்துள்ளது.

கேப்டன் ரோகித் ஷர்மாவிற்கும், துணைக் கேப்டன் ஹர்திக் பாண்டியாவிற்கும் ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் பும்ராவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் “ருதுராஜ் கெய்க்வாட்” துணைக் கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
அயர்லாந்து தொடருக்கான இந்திய அணி:-
ஜஸ்ப்ரித் பும்ரா (கேப்டன்)
ருதுராஜ் கெய்க்வாட் (துணைக் கேப்டன்)
யஷஷ்வி ஜெய்ஸ்வால்
திலக் வர்மா
ரிங்கு சிங்
சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)
ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)
ஷிவம் தூபே
வாஷிங்டன் சுந்தர்
ஷபாஸ் அஹமது
ரவி பிஷ்னாய்
பிரசித் கிருஷ்ணா
ஆர்ஷ்தீப் சிங்
முகேஷ் குமார்
அவேஷ் கான்.
அயர்லாந்து vs இந்தியா சர்வதேச டி20 தொடர் அட்டவணை
முதல் டி20 போட்டி – ஆகஸ்ட் 18 – டுப்லின்
இரண்டாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 20 – டுப்லின்
மூன்றாவது டி20 போட்டி – ஆகஸ்ட் 23 – டுப்லின்
இந்த பட்டியல் வெளியானதும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Discussion about this post