பருப்பு உருண்டை குழம்பு ரெசிபி..!
பருப்புகளில் பொட்டாசியம், நார்ச்சத்து, குறைந்த அளவிலான கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளது. இது இதயத்தை காத்து, இரத்த அழுத்தத்தை சீராகவும் பயன்படுகிறது.
இந்த முறையில் பருப்பு உருண்டை குழம்பு செய்து அசத்துங்க..
தேவையான பொருட்கள்:
- முக்கால் கப் துவரம் பருப்பு
- கால் கப் கடலை பருப்பு
- ஒரு டீஸ்பூன் சோம்பு
- மூன்று வர மிளகாய்
- பத்து சின்ன வெங்காயம்
- கொத்தமல்லி இலை
- உப்பு
- கடுகு
- எண்ணெய்
- அரை டீஸ்பூன் சீரகம்
- அரை டீஸ்பூன் சோம்பு
- ஐந்து பல் பூண்டு
- 15 சின்ன வெங்காயம் மஞ்சத்தூள்
- இரண்டு டீஸ்பூன் மல்லித்தூள்
- இரண்டு டீஸ்பூன் மிளகாய்த்தூள்
- ஒரு தக்காளி
- புளி
- தேங்காய் துருவல்
செய்முறை:
- பருப்புகளை கழுவி ஒரு மணி நேர்த்திற்கு ஊறவைக்க வேண்டும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பருப்புகளை சேர்த்து அதில் வரமிளகாய், சோம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- அரைத்தவற்றை ஒரு பாத்திரத்தில் மாற்றி அதில் தேவையான அளவு உப்பு, பொடியாக நறுக்கிய வெங்காயம், நறுக்கிய கொத்தமல்லி இலை ஆகியவற்றை சேர்த்து பிசையவும்.
- மாவில் கொஞ்சம் வைத்துவிட்டு மீதம் நான் அடுத்ததாக சொல்லும்படி செய்தல் வேண்டும்.
- ஒரு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடானதும் இட்லி தட்டில் லேசாக எண்ணெய் தடவி சூடானதும் அரைத்த மாவில் சிறு சிறு உருண்டைகளாக எடுத்து தட்டில் வைத்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்களுக்கு வேக வைக்க வேண்டும்.
- ஒரு வாணலை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சோம்பு, பூண்டு சேர்த்து தாளிக்க வேண்டும்.
- பின் நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்க வேண்டும். பின் இதில் மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- அடுத்ததாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்.
- தக்காளி வதங்கியதும் புளிக்கரைசலை சேர்க்க வேண்டும்.
- அரைத்த மாவிலை இதில் சேர்த்து உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
- குழம்பு கொதிக்கும் சமையத்தில் தேங்காய் விழுதை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.
- குழம்பு சுண்டியதும் தயாரித்த உருண்டைகளை சேர்த்து சிறிது நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைத்து பின் கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும்.
- அவ்வளவுதான் சுவையான பருப்பு உருண்டை குழம்பு தயார். சாப்பிட்டு மகிழுங்கள்.