தங்கையுடன் உல்லாசமாக இருந்த அண்ணன்..!! லாட்ஜில் சடலமாக மீட்கப்பட்ட பெண்..!!
கோவையில் காதலியை லாட்ஜில் வைத்து கொலை செய்துவிட்டு நாடகமாடிய காதலனை காவலர்கள் கைது செய்துள்ளனர்.. அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..
கோயம்புத்தூர் மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லாட்ஜில் 2 நாட்களுக்கு முன்பு ஒரு காதல் ஜோடி வந்துள்ளனர்.. அன்று இரவு முழுவதும் ரூமில் தனிமையில் இருந்த அந்த காதல் ஜோடிகளில் மறுநாள் காலை அதாவது நேற்று அதிகாலை அந்த காதலன் மற்றும் அவசர அவசரமாக வெளியேறியுள்ளார்.. இதில் சந்தேகமடைந்த ஹோட்டல் நிர்வாக மேலாளர் அவர்கள் தங்கியிருந்த ரூமுக்கு சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. அந்த இளம்பெண், சடலமாக விழுந்து கிடப்பதை கண்டு பீளமேடு காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்..
தகவலின் பேரில் அங்கு வந்த அதிகாரிகள்., சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.. அதன் பின் லாட்ஜில் உள்ள சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த காதலனின் அடையாளங்களை வைத்து தீவிரமாக தேடிவந்தனர்..
அப்போது சந்தேகத்தின் பேரில் கோயம்புத்தூர் பேருந்து நிலையம் அருகே சுற்றி திரிந்த வாலிபரை விசாரணை செய்ததில் அவர் இந்த பெண்ணை கொலை செய்தவர் என்பது தெரியவந்தது.. அதன் பின் அந்த நபரை காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை செய்தனர்..
கொலை செய்த இளைஞர் சின்னியம்பாளையம், ஆர்.ஜி.புதூரை சேர்ந்த சரவணன் ( வயது 29 ) இறந்து கிடந்த பெண் கோவை எஸ்.எஸ்.குளம் அருகே கள்ளபாளையம் பகுதியை சேர்ந்த கீதா (வயது 26) என்பது தெரியவந்தது.. அவினாசி ரோட்டில், ஜிம்மில் டிரெயினராக வேலை பார்த்து வருகிறார்.
கீதாவும் சரவணனும் இருவரும் காதலித்து வந்த நிலையில் அடிக்கடி இருவரும் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.., திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தபோது அவர்கள் இருவரும் அண்ணன் தங்கை முறையை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது..
ஆனால் அதற்கு அசராத இந்த காதல் ஜோடிகள் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியுள்ளனர்.. அப்போது இருவரும் உல்லாசமாக இருந்ததாக சொல்லப்படுகிறது.. அதன் பின் கீதாவின் நடத்தையில் சந்தேகம் அடைந்த சரவணன்.. கீதாவை கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.. சரவணன் அளித்த வாக்குமூலங்களை வைத்து இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்..
தங்கை உறவுமுறை பெண்ணை காதலித்து உல்லாசம் அனுபவித்து விட்டு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது…
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..