நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் ஆட்டுக்கால் சூப்..!
சூப்பூக்களில் பல வகையான சூப்பூக்கள் உண்டு. அதில் ஆட்டுக்கால் சூப் உடலுக்கு பல்வேறு நன்மைகளை தரும். ஆட்டுக்கால் சூப் என்பது தென் தமிழகத்தில் பிரபலமான பானம் ஆகும். ஆட்டுக்கால் சூப் என்பது அந்தக் காலத்தில் இருந்து நம் முன்னோர்களால் பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக உபயோகிக்கப்பட்டது.
நெஞ்சு சளி தொண்டை வலி இருமல் இருந்தால் காரமாக ஆட்டுக்கால் சூப் வைத்து கொடுப்பார்கள். இந்த ஆட்டுக்கால் சூப்பை தொடர்ந்து குடித்தால் பல நன்மைகள் உண்டு .அவற்றை பார்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல் :
1. உடலில் அடிக்கடி ஏற்படுவதற்கு காரணம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருத்தல். இந்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஆட்டுக்கால் சூப் குடித்தால் உடலில் ஏற்படும் சிறு சிறு பிரச்சனைகளை தவிர்க்கலாம். ஆட்டுக்கால் சூப்பில் அர்ஜுனன்கள் உள்ளதால் அது கிருமிகளை எதிர்த்து போராடும் ஒரு பொருளாக இருக்கும்.
2. அமினோ அமிலம் நிறைந்திருக்கும். இந்த அமிலங்கள் ஒவ்வொன்றும் உடலின் செயல்பாட்டிற்கு தேவையான முக்கிய அமிலம் ஆகும். உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
3. 40 வயது மேல் உள்ளவர்களுக்கு மூட்டு வலி கை கால் வலிகள் அதிகமாக இருக்கும். ஆனால் ஆட்டுக்கால் சூப்பை தொடர்ந்து குடித்து வந்தால், மூட்டு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க முடியும்.
4. தூக்கம் இல்லாமல் அவதிப்படுபவர்கள் ஆட்டுக்கால் சூப் குடித்து வர நல்ல தூக்கம் கிடைக்கும். இதில் கிளைசீன் என்ற அமினோ அமிலம் இருப்பதால், உணர்வு நரம்புகளை தளர்த்துகிறது. இதனால் உடல் சோர்வு மன அழுத்தம் போன்றவற்றால் தூக்கமின்மை இருப்பவர்களுக்கு இது நல்ல தூக்க மருந்தாக அமையும்.
5. ஆட்டுக்கால் சூப்பில் ஒமேகா 3 மற்றும் ஒமேகா சிக்ஸ் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் . இது எலும்பு மஞ்சைக்கு மிகவும் நல்லது.
6. உங்கள் சருமம் அழகாக இருக்கவும் இணைப்பு திசுக்கள் ஆரோக்கியமாக இருக்க டைப் 1 மற்றும் டைப் 2 கொலாஜன் இரண்டும் அவசியம். இது ஆட்டுக்கால் சூப்பில் கிடைக்கிறது.
7. ஜீரண சக்தி அதிகரிக்க ஆட்டுக்கால் சூப் உகந்தது. இரவில் குடித்துவிட்டு தூங்கலாம். இது நல்ல செரிமான ஊட்டியாக இருக்கும். குடலில் ஏற்படும் காயங்கள் புண்களை சரி செய்கிறது . இது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடிக்கலாம். நம் உடலுக்கு ஏற்றவாறு காரம் உப்பு ஆகியவற்றை சேர்த்து அருந்த வேண்டும்.
– நிரோஷா மணிகண்டன்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..